Published : 01 Jan 2015 03:16 PM
Last Updated : 01 Jan 2015 03:16 PM

மைக் ஹஸ்ஸியை பயிற்சியாளராக்க தோனி பரிந்துரை?

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக் ஹஸ்ஸியை பரிசீலிக்கலாம் என்று ஓய்வு பெற்ற டெஸ்ட் கேப்டன் தோனி பிசிசிஐ-க்கு பரிந்துரை செய்ததாக தெரிகிறது.

இது குறித்து இந்திய ஊடகம் ஒன்றில் எழுதப்பட்ட பத்தி ஒன்றை மேற்கோள் காட்டி ஆஸ்திரேலிய ஊடகம் ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் வெளியிட்டுள்ள செய்தி வருமாறு:

டன்கன் பிளெட்சருக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரரும் ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடியவருமான மைக் ஹஸ்ஸி பெயரை தோனி பரிந்துரை செய்துள்ளதாக அந்தப் பத்தியில் கூறப்பட்டுள்ளது.

பிசிசிஐ-யின் முதன்மை அதிகாரிகளுக்கு மைக் ஹஸ்ஸியை பயிற்சியாளர் பொறுப்பிற்கு தோனி பரிந்துரை செய்துள்ளார்.

கேரி கர்ஸ்டன் எப்படி பணியாற்றினோரோ அதே போன்ற ஒரு தன்மை ஹஸ்ஸியிடம் இருப்பதாக தோனி கணித்ததாக அந்தப் பத்தியில் கூறபப்ட்டுள்ளது.

மேலும், முரளி விஜய்யின் டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டம் வேறு ஒரு தளத்திற்கு எழுச்சியுறக் காரணமும் மைக் ஹஸ்ஸியே என்று அந்தப் பத்தி குறிப்பிட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸில் மைக் ஹஸ்ஸியுடன் சேர்ந்து விளையாடிய போது அவரிடமிருந்து முரளி விஜய் நிறைய ஆலோசனைகளை பெற்றதாகவும் தெரிகிறது.

ஏற்கெனவே கிரெக் சாப்பல் பயிற்சியாளராக இருந்து வந்த காலத்தில் நடந்தவை மூத்த கிரிக்கெட் வீரர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டதையடுத்து இன்னொரு ஆஸ்திரேலிய பயிற்சியாளரை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் ஏற்குமா என்ற சந்தேகமும் நிலவுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x