Last Updated : 07 Jan, 2015 02:49 PM

 

Published : 07 Jan 2015 02:49 PM
Last Updated : 07 Jan 2015 02:49 PM

முதல் 6 பேட்ஸ்மென்கள் அரைசதம்: சாதனை படைத்த ஆஸ்திரேலிய பேட்டிங்

சிட்னி டெஸ்ட் போட்டியின் 2-ஆம் நாள் ஆட்டமான இன்று ஆஸ்திரேலியா 572/7 என்று டிக்ளேர் செய்தது. அந்த அணியின் முதல் 6 பேட்ஸ்மென்கள் அரைசதம் அடித்து முதன்முறையாக சாதனை படைத்துள்ளனர்.

கிறிஸ் ராஜர்ஸ் (95), வார்னர் (101), வாட்சன் (81), ஸ்மித் (117), ஷான் மார்ஷ் (73), ஜோ பர்ன்ஸ் (58) ஆகியோர் அரைசதம் அடித்தனர். ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் 6 பேட்ஸ்மென்கள் அரைசதம் அடிப்பது இதுவே முதல்முறை, ஒட்டுமொத்தமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுபோன்று 6 முறை எடுக்கப்பட்டுள்ளது. இதில் 4 முறை இந்தியாவுக்கு எதிராக என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 4 டெஸ்ட் போட்டிகளிலும் சதம் கண்டு சாதனை படைத்தார். டான் பிராட்மேன் 6 தொடர் சதங்களையும், நீல் ஹார்வி 4 தொடர் சதங்களையும், மேத்யூ ஹெய்டன் 4 தொடர் சதங்களையும் எடுத்துள்ளனர்.

ஒரே நாட்டுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தொடர் சதங்களை அடித்த வீரர்கள் இரண்டு. ஒன்று ஜாக் காலிஸ் 2002-03 டெஸ்ட் தொடரில் மே.இ.தீவுகளுக்கு எதிராக 4 சதங்களை எடுத்துள்ளார். தற்போது ஸ்டீவ் ஸ்மித் 4 சதங்களை ஒரே தொடரில் எடுத்து சாதனை புரிந்துள்ளார்.

4 இந்திய பவுலர்கள் ஒரு இன்னிங்ஸில் 100 ரன்களுக்கு மேல் வாரி வழங்கியுள்ளது இது 24-வது முறையாகும். ஆனால் இதனை இங்கிலாந்து பவுலர்கள் 32 முறை செய்து இந்திய பவுலர்களுக்கு ஆறுதல் அளித்துள்ளனர். மற்ற அணிகளில் 4பவுலர்களும் ஒரு இன்னிங்ஸில் 100 ரன்களுக்கு மேல் வாரி வழங்கியது 12 முறைதான் என்பது குறிப்பிடத்தக்கது.

மொகமது ஷமி 5 விக்கெட்டுகளை இன்று கைப்பற்றியதன் மூலம் இந்தத் தொடரில் 5 விக்கெட்டுகளை ஒரு இன்னிங்ஸில் கைப்பற்றும் ஒரே பவுலர் என்ற பெருமையை மொகமது ஷமி பெற்றுள்ளார். இதற்கு முந்தைய 2 தொடர்களிலும் ஒரு இந்திய பவுலர்தான் ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x