Published : 01 Jan 2015 12:22 PM
Last Updated : 01 Jan 2015 12:22 PM
தமிழ்நாடு ரயில்வே இடையிலான ரஞ்சி போட்டி டிராவில் முடிவடைந்தது. முதல் இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்த ரயில்வே, 3 புள்ளிகள் பெற்றது.
சென்னையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் தமிழ்நாடு தனது முதல் இன்னிங்ஸில் 213 ரன்கள் எடுத்தது. 3ம் நாள் ஆட்ட முடிவில் ரயில்வே தனது முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்திருந்தது. போட்டியின் கடைசி நாளான நேற்று, ரயில்வே அணி, முதல் இன்னிங்ஸில் 236 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. ஆசிஷ் யாதவ் அதிகபட்சமாக 51 ரன்கள் எடுத்தார். ரங்கராஜன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நேற்று முன்தினம் கழுத்தில் பந்து தாக்கியதால் காயம்பட்ட ரோஹன் போசேல், கடைசியாக ஆடவந்து 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பின்னர், தமிழக அணி தனது 2-வது இன்னிங்ஸில் 49 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது. டிரா ஆன இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ரயில்வே அணி அதிக ரன்கள் எடுத்ததால் 3 புள்ளிகள் பெற்றது. தமிழக அணிக்கு 1 புள்ளி மட்டுமே கிடைத்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT