Published : 20 Jan 2015 10:41 AM
Last Updated : 20 Jan 2015 10:41 AM
திருச்சி ஆர்.கே.வி. கிரிக்கெட் அகாடமி சார்பில் ஸ்ரீ தினேஷ் பி.கன்னா நினைவு மாநில அளவிலான 17 வயதுக்குட்பட்டோருக்கான அகாடமிகளுக்கிடையேயான கிரிக்கெட் போட்டியில் சென்னை வேலம்மாள் அகாடமி அணி முதலிடம் பெற்றது.
ஜனவரி11-ம் தேதி முதல் 18 வரை நடைபெற்ற இந்த போட்டியில் தமிழகம் முழுவதிலுமிருந்து 10 அணிகள் பங்கேற்றன. 20 ஓவர்கள் கொண்டதாக இந்த போட்டிகள் நடைபெற்றன. நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதிப் போட்டியில் சென்னை புனித வளனார் கிரிக்கெட் அகாடமி அணி 19.2 ஓவர்களில் 82 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அடுத்து விளையாடிய வேலம்மாள் கிரிக்கெட் அகாடமி அணி 9 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 85 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
சென்னை ஏசியாட்டிக் கிரிக்கெட் அகாடமி அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஒசூர் ஃபியூச்சர் இந்தியா கிரிக்கெட் அகாடமி அணியை வீழ்த்தி மூன்றாமிடம் பெற்றது.
சிறப்பிடம் பெற்றவர்கள்:
சிறந்த மேட்ஸ்மேன்- பி.ஜெயராமன் (ஃபியூச்சர்), சிறந்த பந்து வீச்சாளர்- வி.தினேஷ்குமார்(வேலம்மாள் பி அணி), சிறந்த ஃபீல்டர்- ஷாம் விக்ரம்(ஆர்கேவி ஏ அணி), சிறந்த விக்கெட் கீப்பர்- யுதிஷ்ரன்(ஆர்கேவி. ஏ அணி), சிறந்த ஆல் ரவுண்டர்- எஸ்.லட்சுமிகாந்த்(ஏசியாடிக்), இறுதிப் போட்டியின் சிறந்த வீரர்- எஸ்.சந்தோஷ்குமார்(வேலம்மாள் பி அணி), தொடரின் சிறந்த வீரர்- பி.ஜெ.ஆண்டனி பிரேம்(புனித வளனார்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT