Published : 31 Jan 2015 02:48 PM
Last Updated : 31 Jan 2015 02:48 PM
முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஒரு போட்டியை கூட வெல்ல முடியாமல் இந்திய அணி வெளியேறியது. இது தனக்கு ஆச்சரியமளிக்கவில்லை என்று ஆஸி. ஒருநாள் அணி கேப்டன் ஜார்ஜ் பெய்லி தெரிவித்துள்ளார்.
ஆனாலும், உலகக்கோப்பையில் இந்திய வாய்ப்புகள் இதனால் கெட்டுப்போய் விடவில்லை என்று கூறிய பெய்லி, “ஆம். இந்திய வாய்ப்புகள் மங்கி விடவில்லை. இந்திய அணி டெஸ்ட் தொடர் மீது நீண்ட நாட்கள் கவனம் செலுத்தியிருக்கலாம், தயாரிப்புகள் அடிப்படையில் டெஸ்ட் தொடருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம், ஆனால் இங்கிலாந்து அணி இந்த முத்தரப்பு ஒருநாள் தொடருக்காக மட்டுமே தன்னைத் தயார் படுத்திக்கொண்டது.
உலகக்கோப்பைக்கு இன்னும் 2 வாரங்கள் இருக்கிறது என்பதை இந்திய அணியினர் நன்றாக அறிவார்கள் என்றே நான் கருதுகிறேன், அதனால் அவர்கள் தங்கள் அணியை தயாரிப்பின் மூலம் மேலும் கட்டமைத்துக் கொள்வார்கள் என்றே நான் கருதுகிறேன்.
இங்கிலாந்து அணி அபாயகரமான அணியாகவே தெரிகிறது. காரணம் அந்த அணி எந்த ஒரு தனிப்பட்ட வீரரின் ஆட்டத்தை நம்பியில்லை. அந்த அணியிடத்தில் நல்ல ‘பேலன்ஸ்’ உள்ளது. ஆட்டத்திற்கு முன் நல்ல திட்டமிடுதல் அந்த அணியிடத்தில் இருப்பதாக எனக்குத் தெரிகிறது. நல்ல வேகப்பந்து வீச்சுடன் கடைசி வரை பேட்டிங்கும் அந்த அணியிடத்தில் உள்ளது.
இப்போதைக்கு நல்ல அணிச் சேர்க்கை அந்த அணிக்குக் கிட்டியுள்ளது. இதனால் விரைவில் விக்கெட்டுகள் சரிந்தாலும் நல்ல ரன்களை எடுக்க முடியும் நிலையில் இங்கிலாந்து உள்ளது.” என்றார் ஜார்ஜ் பெய்லி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT