Published : 23 Jan 2015 03:13 PM
Last Updated : 23 Jan 2015 03:13 PM
ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் இரட்டையர் போட்டிகளில் இன்று இந்தியாவுக்கு பெரும் ஏமாற்றமே கிடைத்தது. பயஸ், போபண்ணா, சானியா மிர்சா ஆகியோர் தோல்வி தழுவி வெளியேறினர்.
சமீபத்தில் சானியா மிர்சா இரட்டையர் தரவரிசையில் 5-ஆம் இடத்தைத் தொட்டார். இன்று 2-வது சுற்று மகளிர் ஆட்டத்தில் சானியா மிர்சா, சீன தைபே வீராங்கனை சூ-வெய்-சிய ஆகியோருக்கு தரவரிசை அளிக்கப்படாத கனடா-போலந்து ஜோடியான காப்ரியலா டாப்ரோவ்ஸ்கி, அலிசியா ரொசோல்ஸ்கா அதிர்ச்சி மருத்துவம் அளித்தனர். இதனையடுத்து சானியா ஜோடி 6-7, 4-6 என்று நேர் செட்களில் தோல்வி தழுவி வெளியேறியது.
ஆனால் கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா-புரூனோ சோரேஸ் இணை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
முதல் சுற்றில் நம்பிக்கை அளித்த போபண்ணா-டேனியல் நெஸ்டர் இணை இன்று 2-வது சுற்றில் பெலிசியானோ லோபஸ்-மாக்ஸ் மிரிண்யி இணையிடம் 5-7, 3-6 என்ற நேர் செட்களில் படு தோல்வி தழுவி வெளியேறியது.
மற்றொரு ஆடவர் இரட்டையர் ஆட்டத்தில் லியாண்டர் பயஸ் இவரது தென் ஆப்பிரிக்க சக வீரர் ராவென் கிளாசன் 6-2, 4-6, 1-6 என்ற செட்களில் சைமன் போலெலி ஃபேபியோ ஃபாக்னீனி என்ற ஜோடியிடம் தோல்வி தழுவியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT