Published : 03 Jan 2015 11:54 AM
Last Updated : 03 Jan 2015 11:54 AM

பாக்சிங் இந்தியா புதிய பெயருக்கு மத்திய அரசு ஒப்புதல்

இந்தியாவில் குத்துச் சண்டை போட்டிகளை நிர்வகித்து வரும் இந்திய குத்துச் சண்டை சம்மேளனம், சர்வதேச போட்டிகளில் பங்கேற்க வசதியாக தனது பெயரை பாக்சிங் இந்தியா என மாற்றிக் கொள்ள அனுமதி கோரி மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியது. இதனை பரிசீலித்த விளையாட்டுத் துறை அமைச்சகம் பாக்சிங் இந்தியா என்ற புதிய பெயருக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. சர்வதேச குத்துச் சண்டை சம்மேளனத்தின் அங்கீகரிக்கப்பட்ட உறுப்பினராக பாக்சிங் இந்தியா உள்ளது.

பாக்சிங் இந்தியா நிர்வாகிகள் இது தொடர்பாக கூறியது: பாக்சிங் இந்தியா பெயருக்கு அனுமதி அளித்த விளையாட்டுத் துறை அமைச்சகத்துக்கு எங்களுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். பெயர் மாற்றப்பட்ட புதிய அமைப்பின் கீழ் முதல் தேசிய சாம்பியின்ஷிப் குத்துச் சண்டை போட்டி நாக்பூரில் ஜனவரி 8-ம்தேதி முதல் 14-ம்தேதி வரை நடைபெறவுள்ளது என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x