Published : 22 Jan 2015 03:59 PM
Last Updated : 22 Jan 2015 03:59 PM
பிசிசிஐ தேர்தலில் சீனிவாசன் போட்டியிடுவதற்கு, உச்ச நீதிமன்றம் புதிய கட்டுப்பாடு ஒன்றை விதித்துள்ளது.
அதன்படி, வணிக நோக்கம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் நிர்வாகத்தில் சீனிவாசன் உள்ளிட்டோர் இடம்பெற்றால், அவர்கள் பிசிசிஐ தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதி இழப்பர் என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளது.
ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் குருநாத் மெய்யப்பன் குற்றவாளி என்றும், சீனிவாசன் குற்றமற்றவர் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஐபிஎல் சூதாட்டம் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் வாசித்த தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
> பிப்ரவரி 2008-ல் விதிமுறை எண் 6.2.4 மீது திருத்தங்கள் கொண்டு வந்து பிசிசிஐ பதவி வகிப்பவர்கள் ஐபிஎல் கிரிக்கெட்டின் வணிக நலன்களில் பங்கேற்க வழங்கியது ரத்து செய்யப்பட்டது.
> லாப நோக்கிலான முரண்பட்ட இரட்டை நலன்கள் விவகாரத்தில் சீனிவாசனுக்கு உச்ச நீதிமன்றம் நற்சான்றிதழ் அளிக்கவில்லை.
> பிசிசிஐ, அல்லது ஐபிஎல் இதில் ஏதாவது ஒன்றை சீனிவாசன் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
> சீனிவாசன் மீதான ஊழல் புகார்கள் நிரூபிக்கப்படவில்லை.
> குருநாத் மெய்யப்பன், ராஜ் குந்த்ரா ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டது நிரூபணம் ஆகியிருக்கிறது. இவர்கள் இருவரும் அணியைச் சேர்ந்த நிர்வாக அதிகாரிகளே.
> முத்கல் கமிட்டி தனது விசாரணையில் அனைத்து விதிமுறைகளையும் கடைபிடித்தது. குந்த்ரா மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் நிரூபித்தது.
> முத்கல் கமிட்டியின் விசாரணையை அறிக்கையை மறு ஆய்வு செய்ய வேண்டிய தேவையில்லை.
> பிசிசிஐ தலைவராகவும் ஐபிஎல் அணி உரிமையாளராகவும் இரட்டைப் பதவி வகித்ததன் மூலம் லாப நோக்கிலான இரட்டை நலன்களுக்கான சூழ்நிலைகளை ஏற்படுத்திவிட்டார் சீனிவாசன்.
> ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங் விசாரணையில் நீதிமன்றத்தினால் அறிவுறுத்தப்பட்ட வழிமுறைகளை பிசிசிஐ கடைபிடிக்கவில்லை.
> எந்த ஒரு பிசிசிஐ அதிகாரியும் வணிக நலன்களை வைத்துக் கொள்ள முடியாது.
வணிக நோக்கம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் நிர்வாகத்தில் சீனிவாசன் உள்ளிட்டோர் இடம்பெற்றால், அவர்கள் பிசிசிஐ தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதி இழப்பர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT