Published : 17 Jan 2015 12:29 PM
Last Updated : 17 Jan 2015 12:29 PM
#அண்டார்டிக் கடல் பகுதியில் 1 டிகிரி செல்சியஸ் குளிரில் 1.4 மைல் தூரத்தை 52 நிமிடங்களில் நீந்தி கடந்து உலக சாதனை படைத்துள்ளார் இந்திய வீராங்கனை பக்தி சர்மா. அவருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். இச்சாதனையை படைத்த இளம் வயது வீராங்கனை, முதல் ஆசிய கண்டத்தை சேர்ந்தவர் என்ற பெருமையையும் பக்தி சர்மா பெற்றுள்ளார்.
# மலேசிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் கிராண்ட் பிரீக்ஸ் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் அஜய் ஜெயராம் அரையிறுதிக்கு சென்றுள்ளார்.
# உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான மொத்த பரிசு தொகை சுமார் ரூ.62 கோடி. இது கடந்த முறையை விட 30 சதவீதம் அதிகம். 2007 உலகக் கோப்பையுடன் ஒப்பிடுகையில் இரு மடங்காகும். இந்த ஆண்டு உலக கோப்பையை வெல்லும் அணிக்கு சுமார் ரூ. 24 கோடிக்கு மேல் பரிசு கிடைக்கும். 2–வது இடம் பிடிக்கும் அணிக்கு சுமார் ரூ.10 கோடி வழங்கப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT