Published : 22 Jan 2015 02:39 PM
Last Updated : 22 Jan 2015 02:39 PM
ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவு ஆட்டங்களில் போபண்ணா-டேனியல் நெஸ்டர் இணை 2-வது சுற்றுக்கு முன்னேறியது.
ஆனால் மற்றொரு இந்திய-ஆஸ்திரிய ஜோடியான மகேஷ் பூபதி-மெல்சர் ஜோடி தோல்வி தழுவி வெளியேறியது.
7-வது தரவரிசையில் உள்ள இந்திய-கனடா இணையான போபண்ணா-நெஸ்டர், சைப்ரஸ்-ஆஸ்திரேலிய இரட்டையர் இணையான பக்தாடிஸ்-மரிங்கோ மடோசெவிச் ஆகியோரை 7-6, 7-5 என்ற நேர் செட்களில் சுமார் ஒன்றரை மணி நேர ஆட்டத்தில் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.
இரு இரட்டையர் ஜோடிகளுமே மோசமாக விளையாடின. சர்வீஸ்களும் அமையவில்லை, ஏகப்பட்ட பிரேக் பாயிண்ட் வாய்ப்புகள் இரு ஜோடிகளுக்கும் கிடைத்தன. போபண்ணா-நெஸ்டர் ஜோடிக்கு 9 பிரேக் பாயிண்ட் வாய்ப்புகள் கிடைத்தன, இதில் 3-ஐ மட்டுமே வெற்றியாக மாற்ற முடிந்தது.
மாறாக சைப்ரஸ்-ஆஸ்திரேலிய இணையான பக்தாடிஸ்-மடோசெவிச் இணைக்கு 6 வாய்ப்புகள் கிடைத்ததிக்ல் 2-ஐ மட்டுமே வெற்றியாக மாற்ற முடிந்தது.
மற்றொரு ஆட்டத்தில் பூபதி-மெல்சர் இணை அர்ஜெண்டீன இணையான டீகோ ஷ்வார்ட்ஸ்மன் - ஹொரேசியோ ஸிபலாஸ் இணையிடம் 4-6, 3-6 என்ற நேர் செட்களில் தோல்வி தழுவி வெளியேறியது.
பூபதி-மெல்சர் இணை ஆட்டத்தின் எந்த நிலையிலும் வெற்றி பெறுவதற்காக ஆடியது போல் தெரியவில்லை. மொத்தம் 27 தவறுகளைச் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT