Published : 07 Jan 2015 04:00 PM
Last Updated : 07 Jan 2015 04:00 PM

முரளி விஜய்யை மோசமாக வழியனுப்பிய ஸ்டார்க்: ஸ்மித் அதிருப்தி

சிட்னி டெஸ்ட் போட்டியின் 2-ஆம் நாள் ஆட்டமான இன்று இந்திய தொடக்க வீரர் முரளி விஜய் விக்கெட்டை வீழ்த்திய மிட்செல் ஸ்டார்க் அவரை நோக்கி சில செய்கைகளைச் செய்தது பற்றி கேப்டன் ஸ்மித் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

இந்த டெஸ்ட் போட்டிக்கு முன்னர் டேவிட் வார்னர் மற்றும் விராட் கோலி இருவரும் அவுட் ஆகிச் செல்லும் பேட்ஸ்மென்களை நோக்கி இழிவான செய்கைகளைச் செய்வது முடிவுக்கு வரவேண்டும், இது அநாகரிகமானது என்று கூறியிருந்தனர்.

இந்நிலையில் இன்று 3-வது பந்தில் முரளி விஜய், மிட்செல் ஸ்டார்க்கின் பந்தை எட்ஜ் செய்து ஆட்டமிழந்தார். அவர் பெவிலியன் செல்லக் கிளம்பிய போது பவுலர் ஸ்டார்க் அவரை நோக்கி சில செய்கைகளைச் செய்தது இப்போது சர்ச்சையாகியுள்ளது.

இது குறித்து கேப்டன் ஸ்மித் கூறும் போது, “நடுவர்கள் இந்த விவகாரம் பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால், ஆட்டத்தில் இது தேவையற்றது என்றே நான் கருதுகிறேன். அவுட் ஆகிச் செல்லும் பேட்ஸ்மெனை நோக்கி இழிவாக செய்கைகளைச் செய்வது முடிக்கப்பட வேண்டும். ஆனால், ஸ்டார்க் செய்ததை நான் இன்று பார்க்கவில்லை, நான் ஹேடினுடன் விஜய் விக்கெட்டை கொண்டாடிக் கொண்டிருந்தேன். இது தேவையற்றது. இப்போது முதல் விக்கெட்டுகள் விழுந்தால் எங்கள் வீரர்கள் அமைதியாக இருப்பதையே நான் விரும்புகிறேன்.” என்று தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x