Last Updated : 16 Jan, 2015 02:39 PM

 

Published : 16 Jan 2015 02:39 PM
Last Updated : 16 Jan 2015 02:39 PM

மார்ச் 29-ல் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடுவோம்: தோனி நம்பிக்கை

ஒருநாள் கிரிக்கெட்டில் முழு கவனம் செலுத்தவுள்ளதாக தெரிவித்த கேப்டன் தோனி, 2011 உலகக்கோப்பையை வென்றது போல் இந்த உலகக்கோப்பையையும் வெல்வோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் நேற்று கூறும்போது, “2011 உலகக்கோப்பையில் ஆடிய ஆட்டத்தை மீண்டும் ஆடுவோம். ஆனால் ஆஸ்திரேலிய சூழ்நிலை வேறு; அதற்கேற்ப ஆடுவது அவசியம்.

உலக கிரிக்கெட்டில் மெல்போர்ன் மைதானம் அற்புதமானது. என்ன விதமான கிர்க்கெட் போட்டிகளாக இருந்தாலும் மெல்போர்ன் சிறந்த மைதானமே. ஒருநாள் கிரிக்கெட்டில் கடந்த 2 ஆண்டுகளாக விளையாடிய விதத்தில் இன்னும் கொஞ்சம் மெருகு கூட்டவிருக்கிறோம். மார்ச் 29-ஆம் தேதி உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடுவோம் என்று நம்புகிறேன்” என்றார்.

டெஸ்ட் போட்டிகளிலிருந்து திடீர் ஓய்வு அறிவித்தது குறித்து அவர் கூறும்போது, “நான் ஓய்வு எடுத்துக் கொண்டேன் அவ்வளவுதான். எந்த விளையாட்டில் ஆடினாலும் சர்வதேச மட்டத்தில் இந்தியாவுக்காக ஆடுவது என்பது ஒரு பெரிய வரம்தான்” என்றார் தோனி.

புதிய சீருடையை அறிமுகம் செய்த நிகழ்ச்சியில் கோலி கூறும்போது,

"டெஸ்ட் கிரிக்கெட்டாக இருந்தாலும் ஒருநாள் கிரிக்கெட்டாக இருந்தாலும் எங்கள் மனநிலையில், அணுகுமுறயில் மாற்றமிருக்காது. நாட்டிற்காக ஆடும் போது ஒவ்வொரு ஆட்டமும் எனக்கு முக்கியத்துவம் வாய்ந்ததுதான்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆடுவது என்பது சவால்தான். ஆனால் இதனை நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறேன். ரசிகர்களின் எதிர்வினையும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. டெஸ்ட் தொடர் நல்ல முறையில் அமைந்தது என்றே நான் கருதுகிறேன். அடுத்தபடியாக முத்தரப்பு ஒருநாள் தொடர் பிறகு உலகக் கோப்பை போட்டிகளின் மேல் என் கவனம் குவியும்.

அடுத்தடுத்து உலகக் கோப்பையை வெல்வது என்பது சிறந்த விஷயம்தான். இந்த முறையும் அந்த நோக்கத்திற்காக விளையாடுவோம்” என்றார் கோலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x