Published : 02 Jan 2015 04:38 PM
Last Updated : 02 Jan 2015 04:38 PM

தோனி பரிந்துரை செய்தியைக் கேட்டு வாயடைத்துப் போன மைக் ஹஸ்ஸி

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பிற்கு மைக் ஹஸ்ஸி பெயரை தோனி பரிந்துரை செய்ததாக எழுந்துள்ள செய்திகள் ஹஸ்ஸியின் காதுகளுக்கும் சென்றுள்ளது.

பெர்த்தில் நேற்று சிட்னி தண்டர் அணிக்கு தனது தலைமையில் வெற்றி தேடித் தந்த மைக் ஹஸ்ஸி, தோனி பரிந்துரை செய்ததாக எழுந்துள்ள செய்தி பற்றி கூறியதாவது, “நான் அந்தப் பொறுப்புக்கு தயாராகிவிட்டேனா என்பது உறுதியாகத் தெரியவில்லை.

தோனி என் பெயரை பரிந்துரை செய்தது உண்மை என்றால் நன்றி எம்.எஸ். (தோனி),... ஆனால் நான் இன்னும் விளையாடிக் கொண்டிருக்கிறேன்.” என்று சிட்னி மார்னிங் ஹெரால்ட் செய்தியில் அவர் கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

79 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள மைக் ஹஸ்ஸி ஆஸ்திரேலியாவின் ‘மிஸ்டர் கிரிக்கெட்’ என்று அழைக்கப்படுகிறார்.

கேரி கர்ஸ்டன் தலைமையில் இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 இடத்தைப் பிடித்தது, உலகக் கோப்பையை வென்றது. ஆனால் அதன் பிறகு பொறுப்பேற்ற டன்கன் பிளெட்சரின் பயிற்சியில் இந்தியா அதிக தோல்விகளை, குறிப்பாக அயல்நாடுகளில் சந்தித்து வருகிறது.

2015 உலகக் கோப்பை வரை பிளெட்சர் நீடிப்பார். அதன் பிறகு புதிய பயிற்சியாளர் பற்றிய விவாதங்கள் எழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x