Published : 05 Jan 2015 12:17 PM
Last Updated : 05 Jan 2015 12:17 PM
விராட் கோலியின் ஆக்ரோஷமான ஆட்டத்தைக் கண்டு ஒட்டுமொத்த ஆஸ்திரேலியாவும் வியக்கிறது என்று இந்திய அணியின் இயக்குநர் ரவி சாஸ்திரி பேட்டி யளித்துள்ளார்.
பி.டி.ஐ செய்தி நிறுவனத்துக்கு ரவி சாஸ்திரி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
விராட் கோலியின் ஆக்ரோ ஷமான அணுகுமுறையில் என்ன தவறு? இந்த அணுகு முறையால் தன்னால் நன்றாக ஆடமுடியும் என எண்ணுகிறார்.
மைதானத்தில் வாய்ப்பேச்சில் மட்டும் ஈடுபட்டு, 5 ரன்களை மட்டும் எடுத்திருந்தால் அவரிடம் இது தொடர்பாக பேசியிருப்பேன். ஆனால் அவர் 499 ரன்கள் எடுத்துள்ளார். ஆகவே கோலியின் அணுகுமுறையால் பலன்தான் கிடைத்துள்ளது.
மெல்போர்னுக்கு விவியன் ரிச்சர்ட்ஸ் வந்தபோது, கோலியின் அணுகுமுறையை மிகவும் பாராட்டினார். டெஸ்ட் தொடரில் கோலி ஆடுகிற விதத்தைப் பார்த்து ஒட்டுமொத்த ஆஸ்திரேலியாவே வியக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதுவும் ஆஸ்திரேலிய மண்ணில் யாரும் இதுபோல ஆடியதில்லை.
இந்திய அணியின் ஓய்வறையில் வீரர்களுக்கு உகந்த சூழலை உருவாக்குவதுதான் என் பணி. நான் முதலில் இந்திய அணியின் இயக்குநராக சேர்ந்தபோது அந்தச் சூழல் இல்லாமல் இருந்தது. அதை மாற்றியுள்ளேன்.
ஆஸ்திரேலியாவில் இந்திய அணி எந்தளவுக்கு போட்டி போட்டு ஆடியுள்ளது என்பதை இந்திய ரசிகர்கள் உணரவில்லை. ஆஸ்திரேலிய மக்கள் இதை உணர்ந்ததால் இந்திய வீரர்களைப் பாராட்டுகிறார்கள். 0-2 என டெஸ்ட் தொடரில் தோற்றுப் போயிருந்தாலும் நம் வீரர்கள் ஆக்ரோஷமாக விளையாடியுள்ளார்கள். இதுதான் எனக்கு பிடித்திருக்கிறது. இந்தியாவுக்காக விளையாடுகிற வாய்ப்புகளை நன்கு பயன்படுத்தியிருக்கிறார்கள்.
வெளிநாட்டு டெஸ்ட் கிரிக் கெட்டில் கடுமையாகப் போராடி, வெற்றி பெற எண்ணுகிறார்கள். பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் இதை நிரூபித்துள்ளார்கள். இதே அணுகுமுறையுடன் ஆடினால், இந்திய கிரிக்கெட் அணி, வருங் காலத்தில் மிகவும் பலமான அணியாக மாறும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT