Last Updated : 20 Jan, 2015 07:37 PM

 

Published : 20 Jan 2015 07:37 PM
Last Updated : 20 Jan 2015 07:37 PM

உலகக்கோப்பை நடத்தப்படும் வடிவம் பிடிக்கவில்லை: திராவிட்

உலகக்கோப்பை போட்டிகள் தற்போது நடத்தப்படும் முறை பிடித்தமானதாக இல்லை. சுலபமாக கணித்து விடக்கூடியதாக இருக்கிறது என்று ராகுல் திராவிட் விமர்சித்துள்ளார்.

இது குறித்து ஈ.எஸ்.பி.என் - கிரிக் இன்ஃபோ இணையதளம் வெளியிட்டுள்ள வீடியோ விவாதத்தில் திராவிட் கூறியதாவது:

"எனக்கு இப்போது நடத்தப்படும் முறை பிடிக்கவில்லை. காலிறுதிக்கு முன்னேறும் டாப் 8 அணிகள் எதுவென்று முன் கூட்டியே கணித்துவிடக் கூடியதாக உள்ளது. கடந்த உலகக் கோப்பையிலும் என்னால் கணித்து விட முடிந்தது. அனைவரும் காலிறுதிப் போட்டிகளுக்காக காத்திருக்கத் தொடங்கி விட்டனர்.

என்னைப் பொறுத்தவரையில் 1999 மற்றும் 2003 உலகக் கோப்பை நடத்தப்பட்ட வடிவம்தான் சிறந்தது. குரூப் பிரிவு ஆட்டங்கள் அதன் பிறகு சூப்பர் சிக்ஸ். அதன் பிறகு அரையிறுதி, பிறகு இறுதி. இதில் சூப்பர் சிக்ஸில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளை எதிர்த்து ஆட வேண்டும்.

தொடர் முழுதும் நன்றாக ஆட வேண்டும். மேலும் மீண்டெழவும் ஒரு வாய்ப்பு இருந்தது.

2007 உலகக்கோப்பை எனக்கு தனிப்பட்ட முறையில் பிடிக்கவில்லை, ஆனால் ஏன் பிடிக்கவில்லை என்பது ஆச்சரியமாகவே உள்ளது. அதிலும் மீண்டும் எழுச்சியுற வாய்ப்பிருந்தது. நோக்கம் சரிதான். ஆனால் ஒரு மோசமான ஆட்டம் அணியை வெளியேற்றுவது கஷ்டமாக இருக்கிறது” என்றார்.

மேலும் அவர் அந்த கலந்துரையாடலில் தெரிவிக்கும் போது, “தொடக்கத்தில் எட்ஜ் கொடுத்து ஆட்டமிழக்காத பேட்ஸ்மெனும் தேவை, அதே வேளையில் ரன்களை விரைவில் எடுக்கும் திறமையும் தேவை. பிட்சில் வேகமும் பந்துகள் எழும்பும்போதும் பலமான பேக்ஃபுட் ஆட்டம் தேவை.

இப்படிப்பட்ட வீரர்களை முன்னால் களமிறக்கி பின்னால் பவர் ஹிட்டர்களை அனுப்புவதுதான் சரியாக இருக்கும்.

இரு முனைகளிலும் புதிய பந்துகள் வீசப்படுவதால் தலா 25 ஓவர்கள்தான் இரு பந்துகளிலும் வீசப்பட்டிருக்கும். புதியதாகவே பந்துகள் இருந்தால் ரிவர்ஸ் ஸ்விங் வீச முடியாது. ஆஸ்திரேலிய பிட்ச்களில் புதிய பந்துகளின் தாக்கம் அதிகம் இருக்கும். மேலும் மைதானங்கள் பெரியது. அதனால் சிக்சர்கள், பவுண்டரிகள் கடினம்.

மேலும், 5 பீல்டர்கள் 30 அடி வட்டத்திற்குள் நிற்கும்போது பகுதி நேர வீச்சாளரைப் பயன்படுத்த முடியாது. 5 சிறப்பு வீச்சாளர்களையே அணியில் தேர்வு செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. கடந்த உலகக்கோப்பையில் யுவராஜ் சிங் முழு 10 ஓவர்களையும் வீச முடிந்தது. இம்முறை அதனைச் செய்ய முடியாது என்றே கருதுகிறேன்.” இவ்வாறு கூறினார் திராவிட்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x