Published : 23 Jan 2015 09:51 AM
Last Updated : 23 Jan 2015 09:51 AM
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசர் 2-வது சுற்றில் அதிர்ச்சி தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார்.
ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மகேஷ் பூபதி, ஆஸ்திரியாவின் மெல்சர் ஜோடி முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறியது.
அதே நேரத்தில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா, கனடாவின் டேனியல் நெஸ்டர் ஜோடி முதல் சுற்றில் வெற்ரி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
பூபதி-மெல்சர் ஜோடி ஆர்ஜெண்டீனாவின் டீகோ ஷ்வார்ட்ஸ்மன் - ஹொரேசியோ ஸிபலாஸ் ஜோடி தங்கள் முதல் சுற்றில் எதிர்கொண்டனர். மிகவும் தடுமாற்றத்துடன் விளையாடிய பூபதி 4-6, 3-6 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளி யேறியது.
7-வது தரவரிசையில் உள்ள இந்திய-கனடா இணையான போபண்ணா-நெஸ்டர், சைப்ரஸ்-ஆஸ்திரேலிய இரட்டையர் இணையான பக்தாடிஸ்-மரிங்கோ மடோசெவிச் ஜோடி 7-6, 7-5 என்ற நேர் செட்களில் வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.
ஆஸ்திரேலியாவின் முதல் நிலை வீராங்கனையான ஸ்டோசர் சொந்த நாட்டில் நடைபெறும் போட்டியில் மிகுந்த நம்பிக்கையுடன் களமிறங்கினார். ஆனால் 2-வது சுற்றில் அமெரிக்காவின் கோகோ வான்தேவிக்கை சமந்தா எதிர்கொண்டார். எனினும் இதில் 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வான்தேவிக் வெற்றி பெற்று சமந்தாவை வெளியேற்றினார். அவர் இப்போதுதான் முதல் முறையாக கிராண்ட்லாம் போட்டி ஒன்றில் 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
மற்றொரு 2-வது சுற்று ஆட்டத்தில் போலந்தின் அக்னிஸ்கா ரத்ஸ்வென்கா, ஸ்வீடன் வீராங்கனை லார்சனை எதிர்கொண்டார். இதில் 6-0, 6-1 என்ற நேர் செட்களில் அக்னிஸ்கா எளிதாக வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
முன்னணி வீரர்கள் ஜோகோவிச், வாங்ரிங்கா, ரயோனிக் ஆகியோர் 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். ஜப்பானின் நிஷி கோரி கடும் போராட்டத்துக்குப் பிறகு 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT