Published : 28 Jan 2015 02:02 PM
Last Updated : 28 Jan 2015 02:02 PM
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் வென்று இந்திய-பிரேசில் ஜோடியான சானியா மிர்சா-புரூனோ சோரேஸ் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர்.
ஆஸ்திரேலிய கலப்பு இரட்டையர் இணையான கேஸி டெல்லகுவா-ஜான் பியர்ஸ் இணையை சானியா - புருனோ இணை 6-2, 6-2 என்ற நேர் செட்களில் அபார வெற்றி பெற்றது.
முதல் செட்டில் எதிரணியினரின் சர்வ்களை இருமுறை முறியடித்து 23 நிமிடங்களில் அந்த செட்டைக் கைப்பற்றினர் சானியா-புருனோ இணை.
2-வது செட்டிலும் தொடக்கத்திலேயே சர்வை முறியடித்து 4-2 என்று முன்னிலை வகித்த சானியா இணை அந்த செட்டையும் 6-2 என்று கைப்பற்றி ஆஸி. இணையை வீழ்த்தியது.
சானியா-புருனோ இணை மொத்தம் 18 வின்னர்களை அடித்ததோடு, 10 முறை தவறிழைக்கவும் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT