Published : 24 Dec 2014 12:07 PM
Last Updated : 24 Dec 2014 12:07 PM
சென்னை பல்கலைக்கழகம் சார்பில் நடைபெற்ற ஏ.எல்.முதலியார் (ஏஎல்எம்) தடகளப் போட்டியின் ஆடவர் பிரிவில் சென்னை லயோலா கல்லூரியும், மகளிர் பிரிவில் சென்னை எம்.ஓ.பி. வைஷ்ணவ கல்லூரியும் சாம்பியன் பட்டம் வென்றன.
சென்னை நேரு மைதானத்தில் 3 நாட்கள் நடைபெற்ற இந்தப் போட்டியின் ஆடவர் பிரிவில் லயோலா கல்லூரி அணி 12 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம் என 21 பதக்கங்களை வென்று சாம்பியன் ஆனது. சென்னை கிறிஸ்தவக் கல்லூரி அணி 4 தங்கம், 10 வெள்ளி, 5 வெண்கலம் என 19 பதக்கங்களுடன் 2-வது இடத்தைப் பிடித்தது.
மகளிர் பிரிவில் எம்.ஓ.பி. வைஷ்ணவ கல்லூரி அணி 14 தங்கம், 9 வெள்ளி, 7 வெண்கலம் என 30 பதக்கங்களுடன் சாம்பியன் ஆனது. எத்திராஜ் கல்லூரி அணி 3 தங்கம், 5 வெள்ளி, 5 வெண்கலம் என 13 பதக்கங்களுடன் 2-வது இடத்தைப் பிடித்தது. மகளிர் பிரிவில் எம்.ஓ.பி. மாணவி ஜி.காயத்ரி 1,067 புள்ளிகளுடன் சிறந்த வீராங்கனையாகவும், ஆடவர் பிரிவில் டி.ஜி.வைஷ்ணவ கல்லூரி மாணவர் மோகன் குமார் 983 புள்ளி களுடன் சிறந்த வீரராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT