Published : 22 Dec 2014 10:27 AM
Last Updated : 22 Dec 2014 10:27 AM
உலகக்கோப்பை போட்டிக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப்போவதாக பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் ஷாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “ஒருநாள் போட்டியில் நல்ல விதமாக ஓய்வு பெறவேண்டும் என்று எப்போதும் நினைப்பேன். அதற்கு இதுதான் சரியான நேரம். இனிமேல் டி20 போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தவுள்ளேன். பெரிய வீரர்கள் எந்த நேரத்தில் ஓய்வு பெறுவது என்று முடிவெடுக்கத் தெரியாமல் இருந்ததைப் பார்த்துள்ளேன். ஆனால் நான் மிகுந்த தைரியத்துடன் இந்த முடிவை எடுத்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன். சரியான முறையில் ஓய்வு அறிவிப்பை வெளியிடும் முதல் பாகிஸ்தான் வீரர் நான்தான்.
ஒருநாள் போட்டியில் நான் நிறைய சாதித்துவிட்டேன். இப்போது மனதில் எந்தப் பாரமும் இல்லாததால் உலகக்கோப்பையில் நன்றாக விளையாடுவேன். ஒருநாள் கிரிக்கெட்டில் 8000 ரன்களையும் 400 விக்கெட்டுகளையும் எடுப் பேன். கேப்டன் பதவிக்காக எப்போதும் ஆர்வம் செலுத்தியது கிடையாது. அதுவாகத்தான் எனக்குக் கிடைத்தது. மிஸ்பா காயத்திலிருந்து விரைவில் குணமாகி, உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணியை வழிநடத் துவார். 2016 டி20 உலகக்கோப்பை இந்தியாவில் நடக்கவுள்ளது. அந்தப் போட்டியை வெல்ல ஆவலாக உள்ளேன். அதற்கான அணியை உருவாக்குவேன்” என்றார். அப்ரிடி இதுவரை 389 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7870 ரன்களும் 391 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT