Published : 23 Dec 2014 03:05 PM
Last Updated : 23 Dec 2014 03:05 PM
ஆஸதிரேலிய வலைப்பயிற்சியின் போது வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பேட்டின்சன் பவுன்சர் ஒன்று வாட்சனின் ஹெல்மெட்டைத் தாக்க வாட்சன் ஒருநிமிடம் ஆடிப்போனார். பிறகு மைதானத்தை விட்டு ஓய்வறைக்குத் திரும்பினார்.
பேட்டின்சனும் மேலும் பயிற்சியைத் தொடராமல் வருத்தத்துடன் வெளியேறியதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மைதானத்திலேயே ஆஸி, அணி மருத்துவர் பீட்டர் பக்னர் முதலுதவி செய்ய பிறகு அவர் தொடர்ந்து பேட்டிங் செய்ய முடியாமல் ஓய்வறைக்குத் திரும்பினார். மிகவும் வருத்தமடைந்த பவுலர் ஜேம்ஸ் பேட்டின்சனும் பெவிலியன் திரும்பினார்.
ஷேன் வாட்சன் குறித்து சக வீரர் பிராட் ஹேடின் கூறுகையில், “வாட்சனுக்கு ஒன்றுமில்லை, ஆனால் அவர் கொஞ்சம் நிலைகுலைந்து போயுள்ளார்.
“பந்து தலையில் பட்டது, எனவே அனைவரையும் போல் அவருக்கும் கொஞ்சம் அச்சம் ஏற்படுவது இயல்பே. இந்தத் தகவல்களைத் தவிர வேறு விவரங்கள் என்னிடம் இல்லை.” என்றார் பிராட் ஹேடின்.
வலைப்பயிற்சியை நேரில் பார்த்தவர்களை மேற்கோள் காட்டி ஆஸி. ஊடகம் ஒன்று தெரிவிக்கும் போது, “பவுன்சர் ஹெல்மெட்டைத் தாக்க அதன் அதிர்வு தலையில் ஏற்பட அவர் சற்று முழங்காலை மடக்கி மண்டியிட்டார். அதாவது கீழே விழுந்தார் என்று கூற முடியாது, கொஞ்சம் பயந்து போனார் வாட்சன்” என்று பதிவு செய்துள்ளது.
உடனேயே பேட்டின்சன் உட்பட ஆஸி. வீரர்கள் அனைவரும் வாட்சனை நெருங்கி ஆதரவு அளித்தனர். பிறகு மருத்துவர் பீட்டர் பக்னர் வாட்சனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார். பிறகு வாட்சன் ஓய்வறைக்குத் திரும்பினார்.
மற்றொரு மிட்செல் ஸ்டார்க்கும் முழங்காலில் அடிவாங்கி விந்திய படியே பெவிலியன் சென்றதாகவும், ஆனால் அவரும் சரியாகிவிட்டார் என்று பிராட் ஹேடின் தெரிவித்துள்ளார்.
அணித் தேர்வாளர் மார்க் வாஹ் கூறும் போது, "வலையில் அவர் தன் கடைசி பந்தை எதிர்கொண்டார், அப்போது பவுன்சரில் நெற்றிப்பகுதியில் அடிபட்டது போல் தெரிகிறது. அறைவிடுதியில் கொஞ்சம் மன அமைதியின்றி இருந்தார். இன்று சில மருத்துவ சோதனைகள் அவருக்கு செய்யப்படுகின்றன. டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என்றே கருதுகிறோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT