Published : 27 Dec 2014 11:25 AM
Last Updated : 27 Dec 2014 11:25 AM
சென்னை பல்கலைக்கழகம் சார்பில் தென் மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான வாலிபால் போட்டி சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள டி.பி.ஜெயின் கல்லூரியில் நேற்று தொடங்கியது.
போட்டியை சென்னை பல்கலைக்கழக பதிவாளர் டேவிட் ஜவஹர் தொடங்கி வைத்தார். 52 அணிகள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டி நாக் அவுட் மற்றும் லீக் அடிப்படையில் நடைபெறுகிறது. நேற்று நடைபெற்ற நாக் அவுட் சுற்றில் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அணி 25-18, 25-19, 26-24 என்ற நேர் செட்களில் என்.டி.ஆர். பல்கலை.யையும், திருவள்ளூர் பல்கலை. அணி 25-22, 22-25, 25-7, 25-9 என்ற செட் கணக்கில் அதிகவி நன்னன் பல்கலை.யையும், மைசூர் பல்கலை. 25-10, 25-7, 25-7 என்ற கணக்கில் கர்நாடக மாநில பல்கலை.யையும், யோகி வீமணா பல்கலை. 25-2, 25-12, 25-1 என்ற கணக்கில் ராஜீவ் காந்தி பல்கலை.யையும், காந்திகிராம பல்கலை. அணி 25-3, 25-12, 25-9 என்ற கணக்கில் ராயலசீமா பல்கலை.யையும் தோற்கடித்தன.
இதேபோல் கிறைஸ்ட் பல்கலை., காருண்யா, பெங்களூர் பல்கலை., ஜே.என்.டி.யு ஹாக்கிநாடா, பெரியார் பல்கலை. ஆகிய அணிகளும் நேற்றைய ஆட்டங்களில் வெற்றி பெற்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT