Published : 24 Dec 2014 12:14 PM
Last Updated : 24 Dec 2014 12:14 PM
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டு, உலகக்கோப்பை அணியிலும் இடம் கிடைக்காத நிலையில் அலாஸ்டர் குக், தன் வேதனையைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: இங்கிலாந்து அணியின் கேப்டன் பதவியிலிருந்து நான் நீக்கப்பட்டதால் வருத்தமும் வெறுப்பும் அடைந்துள்ளேன். சிலநேரங்களில் இப்படி நடக்கும். இதுதான் உலகம். இதிலிருந்து நாம் மீண்டுவரவேண்டும். இங்கிலாந்து அணி வீரர்களுக்கு என் வாழ்த்துகளைக் கூறிக்கொள்கிறேன்.
ஜனவரி 2016 வரை இங்கிலாந்து அணி 17 டெஸ்டுகளில் ஆடவுள்ளது. இதில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுடனான டெஸ்ட் தொடர்கள் முக்கியமானவை. இந்தத் தொடர்களில் நன்றாக விளையாடி மீண்டும் கிரிக்கெட்டை விரும்ப ஆரம்பிப்பேன் என நினைக்கிறேன் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT