Published : 16 Dec 2014 12:59 PM
Last Updated : 16 Dec 2014 12:59 PM

கார்ல்சனுடன் மோதிய தமிழக சிறுவன் தோல்வி

செஸ்.காம் நடத்திய போட்டியில் உலக செஸ் சாம்பியன் கார்ல்சனுடன் மோதிய தமிழகத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ராஜரிஷி கார்த்தி தோல்வியடைந்தார்.

செஸ்.காம்-மில் நடத்தப்பட்ட போட்டியின் மூலம் 10 நபர்களுக்கு கார்ல்சனுடன் மோதும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த ராஜரிஷியும் ஒருவர். செஸ்.காம் இணையதளத்தில் நடைபெற்ற இப்போட்டியில் கருப்பு நிறக் காய்களுடன் ஆடிய ராஜரிஷி, 50-வது நகர்த்தலில் கார்ல்சனிடம் தோல்வியடைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x