Last Updated : 29 Dec, 2014 06:27 PM

 

Published : 29 Dec 2014 06:27 PM
Last Updated : 29 Dec 2014 06:27 PM

இன்னும் ரன்கள் தேவை என்கிறார் டேவிட் வார்னர்

மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின் 4-ஆம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 326 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்த ரன்கள் போதாது இன்னும் ரன்கள் தேவை என்கிறார் டேவிட் வார்னர்.

அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் இதே போன்ற சூழ்நிலையில் இந்தியா 350 ரன்களுக்கும் மேற்பட்ட இலக்கை வெற்றி பெறும் நோக்கத்துடன் துரத்தி கடைசியில் கோலி தனது அபாரமான 141 ரன்களில் அவுட் ஆக இந்தியா 315 ரன்கள் எடுத்து தோல்வி தழுவியது. இது ஆஸ்திரேலிய வீரர்கள் மனதில் இருந்து வருகிறது.

இந்நிலையில், டேவிட் வார்னர் கூறும்போது, “அடிலெய்ட் டெஸ்டில் இந்திய அணி எப்படி எழுச்சி பெற்று வெற்றிக்கு ஆடியது என்பதைக் கண்டோம். அதிர்ஷ்டவசமாக கோலி அவுட் ஆனதால் வெற்றி கிட்டியது இல்லையெனில் அந்த டெஸ்ட் போட்டி வேறு கதையாகியிருக்கும். இந்தியா 1-0 என்று முன்னிலை பெற்றிருக்கும்.

கோலியும் ரஹானேவும் அதிர்ஷ்டத்துடன் ஆடினாலும் பெரிய அளவில் ரன்களை ஜோடி சேர்ந்து எடுக்கும் திறமை உடையவர்கள் என்பது தெரிந்தது. எங்கள் மனதில் அவர்கள் ஆடிய இன்னிங்ஸ் இடம்பிடித்துள்ளது. தன்னம்பிக்கையான கிரிக்கெட்டை அவர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். எனவே நாளை 10 விக்கெட்டுகளை வீழ்த்தவே நாங்கள் போராடுவோம்.

ரன்களை வறளச் செய்து இந்திய பேட்ஸ்மென்களை வீழ்த்த முயற்சி செய்வோம், பந்து கொஞ்சம் மென்மையான பிறகு ரிவர்ஸ் ஸ்விங் ஆகும், இதுவே முக்கியமான தருணம். 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றுவதற்கான சந்தர்பங்களை நாங்கள் உருவாக்குவோம்” என்றார் வார்னர்.

இதனையடுத்து இந்திய ஸ்பின்னர் அஸ்வின் கூறும்போது, “கடைசி நாளில் எந்த ஒரு ஸ்கோரும் சற்று கடினமே. கடினமான வேலைதான் ஆனால் அதற்காகத்தான் இங்கு வந்திருக்கிறோம், வெற்றி பெறவே இங்கு வந்திருக்கிறோம். தன்னம்பிக்கையுடன் ஆடி எதுவரை செல்ல முடியுமோ அதுவரை செல்வோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x