Published : 17 Dec 2014 04:00 PM
Last Updated : 17 Dec 2014 04:00 PM
தென்கொரியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதை எதிர்த்து வெண்கலப்பதக்கத்தை வாங்க மறுத்த குத்துச் சண்டை வீராங்கனை சரிதா தேவி விளையாட 1 ஆண்டு தடை விதித்தது அனைத்துலக குத்துச்சண்டை கூட்டமைப்பு.
மேலும், இந்தியாவின் அயல்நாட்டு பயிற்சியாளர் ஃபெர்னாண்டஸுக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேசியப் பயிற்சியாளர் ஜி.எஸ்.சாந்து தப்பித்தார்.
எனவே, அக்டோபர் 1, 2014 முதல் அக்டோபர் 2015 வரை சரிதா தேவி தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்குபெறக்கூடாது. மேலும் 1,000 சுவிஸ் பிராங்குகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் 2016ஆம் ஆண்டு பிரேசில் ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க முடியும் என்று தெரிகிறது.
விளையாட்டுத் துறை அமைச்சர் சர்பாநந்த சோனோவல், சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் முயற்சி செய்தும் சரிதா தேவி தடையிலிருந்து தப்ப முடியவில்லை.
ஒரு அநீதியைத் தட்டி கேட்டால் இன்னொரு அநீதி தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அனைத்திந்திய குத்துச் சண்டை கூட்டமைப்புக்கு உலக நாடுகளின் ஒலிம்பிக் சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவிப்பது அவசியம் என்று இது தொடர்பாக நிபுணர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT