Published : 28 Dec 2014 09:57 AM
Last Updated : 28 Dec 2014 09:57 AM
இந்தியா ஆஸ்திரேலியா இடையே மெல்போர்னில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்தியா, தேநீர் இடைவேளையின் போது 3 விக்கெட்டுகளை இழந்து 336 ரன்களை எடுத்திருந்தது. இதனால் ஃபாலோ ஆன் தவிர்க்கப்பட்டது.
இந்திய வீரர்கள் விராட் கோலி மற்றும் ரஹானே இருவரும் சதத்தைக் கடந்து ஆடி வருகின்றனர். முன்னதாக இன்றைய ஆட்டத்தை 108 ரன்களுக்கு 1 விக்கெட் என்ற நிலையில் தொடங்கிய இந்திய அணி, முதல் ஓவரிலேயே புஜாராவை 25 ரன்களுக்கு இழந்தது. நிலைத்து ஆடி வந்த முரளி விஜய் 68 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அடுத்து ஜோடி சேர்ந்த ரஹானே மற்றும் கோலி இணை வெகு சிறப்பாக ஆடி ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை திறம்பட எதிர்கொண்டனர். ரஹானே விரைந்து ஆடி 127 பந்துகளிலேயே சதத்தை எட்டினார். மறுமுனையில் ஆடி வந்த கோலியும், லயான் வீசிய பந்தை பவுண்டரிக்கு விரட்டி 166 பந்துகளில் சதத்தைக் கடந்தார். இந்த ஜோடி, பார்ட்னர்ஷிப்பில் இதுவரை, 189 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT