Published : 11 Dec 2014 07:46 PM
Last Updated : 11 Dec 2014 07:46 PM
அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் இன்று இந்திய அணியின் முதல் இன்னிங்ஸில் 73 ரன்கள் எடுத்த புஜாரா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆரோக்கியமான சராசரி வைத்துள்ளார்.
3-ஆம் நாள் ஆட்டத்தின் சுவையான தகவல்கள் சில:
முரளி விஜய் இன்று எடுத்த அரைசதம் (53 ரன்கள்), டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது 7-வது அரைசதம் ஆகும். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2-வது அரைசதமாகும்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முரளி விஜய் இதுவரை 733 ரன்களை, 61.08 என்ற சராசரியில் எடுத்துள்ளார். 3 சதங்கள் இரண்டு அரைசதங்கள்.
புஜாரா இன்று எடுத்த அரைசதம் (73 ரன்கள்) அவரது 6-வது டெஸ்ட் அரைசதமாகும். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4-வது அரைசதம்.
ஜொகான்னஸ்பர்கில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக புஜாரா 153 ரன்களை எடுத்த பிறகு அயல்நாட்டில் அவரது 2-வது பெரிய ஸ்கோர் இது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் இன்று தொடர்ச்சியாக 3-வது அரைசதம் எடுத்துள்ளார். டெல்லியில் 52 மற்றும் 82 நாட் அவுட். பிறகு இப்போது அடிலெய்டில் 73.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக புஜராவின் ரன் விகிதம் அபாரம். 10 இன்னிங்ஸ்களில் 568 ரன்களை அவர் ஆஸி,.க்கு எதிராக எடுத்துள்ளார். சராசரி 71.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 ரன்கள் அல்லது அதற்கு மேலாக எடுத்து டிக்ளேர் செய்த தருணங்கள் 300. ஆஸ்திரேலியா அணி மட்டும் இதில் 67 முறை டிக்ளேர் செய்துள்ளது.
கேப்டனாக அறிமுகமாகும் முதல் டெஸ்ட் போட்டியில் சதம் எடுத்தவராக கோலி 4-வது வீரராகத் திகழ்கிறார். இந்திய அணியில் விஜய் ஹசாரே, சுனில் கவாஸ்கர், திலிப் வெங்சர்க்கார் ஆகியோர் கேப்டனாக களமிறங்கிய முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் கண்டுள்ளனர்.
கோலிக்க்கு இது 7-வது டெஸ்ட் சதம். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3-வது சதம்.
ஆஸ்திரேலியாவில் இந்திய தொடக்க வீரர்களின் ரன் சேர்ப்பு மிகவும் மோசமாக உள்ளது. ஆஸ்திரேலியாவில் இந்திய அணி விளையாடிய கடைசி 10 இன்னிங்ஸ்களில் இன்று விஜய், தவன் சேர்த்த 30 ரன்கள்தான் அதிகபட்ச தொடக்க ஜோடி ரன் சேர்ப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
ரஹானே இன்று மிகவும் அனாயசமாக 76 பந்துகளில் 62 ரன்களை விளாசினார். 2014ஆம் ஆண்டில் அதிக ரன்களை குவித்துள்ள இந்திய வீரர் ரஹானேதான். 8 டெஸ்ட் போட்டிகளில் 523 ரன்களை 40.23 என்ற சராசரியில் அவர் எடுத்துள்ளார்.
2வது, 3வது, 4வது, மற்றும் 5-வது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்து 50 ரன்களுக்கு மேல் சேர்த்துள்ளது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா முதன்முறையாக செய்துள்ள சாதனையாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT