Published : 27 Dec 2014 04:45 PM
Last Updated : 27 Dec 2014 04:45 PM
தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் நல்ல நிலையிலிருந்து மோசமான நிலைக்கு இந்திய அணி செல்வதற்கு தோனியின் கேப்டன்சி அணுகுமுறையே காரணம் என்று பலதரப்பிலும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
பொதுவாக தோனியை பாராட்டும் இயன் சாப்பல், ஆஸ்திரேலியாவை 216/5 என்ற நிலையிலிருந்து 530 ரன்கள் எடுக்க விட்டதற்கு காரணம் தோனியே என்று கூறியுள்ளார்.
கடந்த டெஸ்ட் போட்டியில் மிட்செல் ஜான்சனுக்கு ஷாட் பிட்ச் பந்துகளை வீசி பல்பு வாங்கிய இந்திய அணி இன்று பிராட் ஹேடின், ரயான் ஹேரிஸ் ஆகியோரிடம் மீண்டும் பல்பு வாங்கியது.
களத்தில் தோனியின் எந்த வித நோக்கமுமற்ற தோனியின் கேப்டன்சியினால் இந்திய அணி காயப்பட்டுள்ளது என்று கூறிய இயன் சாப்பல், 2010ஆம் ஆண்டு பாகிஸ்தானின் மொகமது யூசுப் சிட்னியில் கேப்டனாக செயலாற்றிய விதம் அந்த அணிக்கு தோல்வியைப் பெற்றுத்தந்தது.
அந்த மோசமான கேப்டன்சிக்குப் பிறகு தோனியின் மோசமான கேப்டன்சியைத் தான் காண்பதாக சாப்பல் தெரிவித்தார்.
“இது படுமோசமான கேப்டன்சி, பவுலர்களுக்கு இவரது களவியூகத்தினால் எந்த பயனும் ஏற்படவில்லை. பவுலர்களுக்கு விக்கெட் வீழ்த்தும் வாய்ப்புகள் இவரது மோசமான கேப்ட்ன்சி, மற்றும் களவியூகத்தினால் இழக்கப்படுகிறது. இன்று காலை தோனியின் உத்திகள் ஆஸ்திரேலியாவுக்கு பயனளிப்பதாக அமைந்தது. அர்த்தமற்ற கேப்டன்சி.:” என்று சாடினார்.
கங்குலியும் தோனியின் டெஸ்ட் கேப்டன்சி மற்றும் பயிற்சியாளர் டன்கன் பிளெட்சர் மீது தனது விமர்சனங்களைத் தொடுத்தார்.
"இந்த 2 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமல்ல, தொடர்ந்து சிறிது காலமாக தோனி கேப்டன்சியில் தடுமாறுகிறார். டெஸ்ட் போட்டி மட்டத்தில் அவர் அணியை எந்த ஒரு நம்பிக்கையான நிலைக்கு அழைத்துச் செல்லவில்லை.
ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் சாதனைகள் புரிந்துள்ளார். ஆனால் டெஸ்ட் போட்டிகளில் அவரது கேப்டன்சி வீழ்ச்சிகளை சந்தித்து வருகிறது.
சுமார் 60 டெஸ்ட் போட்டிகளாக தோனி கேப்டனாக இருக்கிறார். அவருக்கு போதுமான கால அவகாசம் அளித்துவிட்டதாகவே கருதுகிறேன்.
இந்திய அணியின் எதிர்காலம் விராட் கோலிதான் என்று நான் நினைக்கிறேன். அவர்தான் இந்தியாவின் கேப்டன். தன்னம்பிக்கையும் ஆக்ரோஷமும் தேவை, கோலி ஒரு தன்னம்பிக்கை மிக்க கேப்டன், ஆக்ரோஷமான கேப்டன்கள் நமது அணிக்கு இப்போது தேவை.
அவருக்கு ஆட்டத்தின் மீது இருக்கும் நேசம் எனக்கு பிடித்திருக்கிறது.
சச்சின் கேப்டன்சியை உதறிய பிறகு என் தலைமையின் கீழ் விளையாடினார். நான் திராவிடின் தலைமையின் கீழ் ஆடினேன். திராவிட் தோனியின் தலைமையின் கீழ் ஆடியுள்ளார். மைக்கேல் கிளார்க்கின் தலைமையில் பாண்டிங் விளையாடினார். எனவே ஒரு வீரராக தோனி தொடரலாம்” என்றார் கங்குலி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT