Published : 23 Dec 2014 03:49 PM
Last Updated : 23 Dec 2014 03:49 PM
ஜடேஜா காயமடைந்ததையடுத்து அக்சர் படேலை கடைசி 2 டெஸ்ட் போட்டிகளுக்காக ஆஸ்திரேலியா அனுப்புவது கரன் சர்மாவின் நிலையை குறைவாக மதிப்பிடுவதாகும் என்று முன்னாள் வீரர்கள் கருதுகின்றனர்.
பிஷன் சிங் பேடி, மற்றும் முன்னாள் ஆஃப் ஸ்பின்னர் எராப்பள்ளி பிரசன்னா ஆகியோர் அயல்நாட்டு பிட்ச்களில் ஸ்பின்னர்களை வெறும் மாற்று பவுலர்களாக, பகுதி நேர பவுலர்களாக கேப்டன் தோனி குறுக்குவது தவறு என்று சாடியுள்ளனர்.
பிஷன் பேடி கூறும் போது, “அயல்நாட்டு பிட்ச்களில் இந்திய ஸ்பின்னர்களை நம்பிக்கையில்லாமல் தோனி பயன்படுத்துவது கவலையளிப்பதாகும், அக்ஷர் படேலை கடைசி 2 டெஸ்ட் போட்டிகளுக்காக ஆஸ்திரேலியா அனுப்புவது கரன் சர்மாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், அவர் முதல் டெஸ்ட் போட்டியில் ஆடியுள்ளார். ஓரளவுக்கு நன்றாகவே வீசினார்.
இது அணியில் உள்ள ஸ்பின்னர்கள் மீது தோனிக்கு இருக்கும் நம்பிக்கையின்மையைக் காட்டுகிறது. ஸ்பின்னர்களை ‘ஸ்டாக் பவுலர்’களாக மட்டுமே தோனி பயன்படுத்துகிறார்.
பிரசன்னா கூறும் போது, “ஸ்பின்னர்கள் குறித்த தோனியின் அணுகுமுறை அணிக்கு நன்மை செய்யாது, அக்ஷர் படேல் 5 நாள் கிரிக்கெட்டுக்கான பவுலர் அல்ல. நம் பவுலர்கள் பின்னால் களமிறங்கும் பவுலர்கள் விக்கெட்டுகளை எடுக்கவே திணறுகின்றனர்.
மணீந்தர் சிங் கூறும்போது, “அக்சர் படேலிடம் நல்ல அணுகுமுறை உள்ளது. தோனி அவரை சரியாகப் பயன்படுத்த வேண்டும், தோனிக்கு ஸ்பின்னர்களை எப்படி கையாள்வது என்பது தெரியவில்லை என்றே தோன்றுகிறது. ஸ்பின் பவுலிங் என்ற கலைக்கு நடப்பு கேப்டன் நன்மை செய்வது போல் தெரியவில்லை.
ஸ்பின்னர்கள் ரன்களை கட்டுப்படுத்த வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டும் விக்கெட்டுகளை வீழ்த்தி போட்டிகளை வெல்ல முடியாது, லார்ட்ஸில் பெற்ற வெற்றி ஒரு எதேச்சையான ஃபுளூக்.
கேப்டனாக விராட் கோலி மிகவும் பாசிடிவ்வாக தெரிகிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு லெக் ஸ்பின்னரை (கரன் சர்மா) அணியில் விளையாட வைப்பது என்பதே அவரது பலமான மனநிலையை பிரதிபலிக்கிறது” என்றார் மணீந்தர் சிங்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT