Last Updated : 14 Nov, 2014 10:58 AM

 

Published : 14 Nov 2014 10:58 AM
Last Updated : 14 Nov 2014 10:58 AM

சீன ஓபன்: காலிறுதியில் சாய்னா, காஷ்யப்

சீன ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால், காஷ்யப், ஸ்ரீகாந்த் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

சீனாவின் புஸாவ் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற 2-வது சுற்றில் சாய்னா 21-18, 21-18 என்ற நேர் செட்களில் சீனாவின் கின் ஜின்பிங்கை தோற்கடித்தார். அடுத்த சுற்றில் சீனாவின் டி சுயோவை சந்திக்கிறார் சாய்னா.

ஆடவர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் காஷ்யப் 11-21, 21-11, 21-13 என்ற செட் கணக்கில் சீனாவின் ஸியூ சாங்கை தோற்கடித்தார். மற்றொரு இந்தியரான ஸ்ரீகாந்த் தனது 2-வது சுற்றில் கடும் சவாலை சந்தித்தபோதும் 21-17, 19-21, 21-14 என்ற செட் கணக்கில் சீனாவின் காவ் ஹுவனை வீழ்த்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x