Published : 10 Nov 2014 09:39 AM
Last Updated : 10 Nov 2014 09:39 AM

ஹாக்கி: ஆஸி.க்கு எதிராக வரலாறு படைத்தது இந்தியா

நடப்பு உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஹாக்கி டெஸ்ட் தொடரின் கடைசி ஆட்டத்தில் இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது. இதன்மூலம் 4 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை இந்தியா 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணி, அடுத்த மாதம் இந்தியாவில் நடக்கவுள்ள சாம்பியன்ஸ் டிராபிக்கு தயாராகும் வகையில் ஆஸ்திரேலியாவுடன் 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.

இதில் முதல் ஆட்டத்தில் தோற்ற இந்தியா, பின்னர் நடந்த இரு ஆட்டங்களில் வென்றிருந்த நிலையில், நேற்று நடைபெற்ற கடைசி ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்தி ரேலியாவை வீழ்த்தியதன் மூலம் தொடரை வென்று புதிய சரித்திரம் படைத்துள்ளது. 200-வது சர்வதேச ஆட்டத்தில் விளையாடிய இந்திய கேப்டன் சர்தார் சிங்கிற்கு இந்தப் போட்டி மறக்க முடியாததாக அமைந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x