Last Updated : 24 Nov, 2014 03:52 PM

 

Published : 24 Nov 2014 03:52 PM
Last Updated : 24 Nov 2014 03:52 PM

சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: இந்திய அணி அறிவிப்பு

இந்தியாவில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் விளையாடும் 18 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 6-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை புவனேஷ்வரில் உள்ள கலிங்கா விளையாட்டு மைதானத்தில் 8 நாடுகள் பங்கேற்கும் மதிப்பு மிக்க சாம்பியன்ஸ் டிராபி சர்வதேச ஹாக்கி தொடர் நடைபெறுகிறது.

டிச.6-ஆம் தேதி ஒலிம்பிக் சாம்பியன் ஜெர்மனியை இந்தியா தன் முதல் போட்டியில் சந்திக்கிறது. பிறகு அர்ஜெண்டீனா மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகளுடன் மோதுகிறது.

டெரி வால்ஷ் பயிற்சி காலத்தில் இந்தியா நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆசிய விளையாட்டில் தங்கம் வென்றதோடு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியது.

இந்த நிலையில் டெரி வால்ஷ் இல்லாததால் இந்திய அணி ஆல்ட்மான்ஸ் என்ற பயிற்சியாளரின் வழிகாட்டுதலில் இயங்கி வருகிறது.

இந்திய அணிக்கு சர்தார் சிங் கேப்டனாக் நியமிக்கப்பட்டுள்ளார். கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அணி விவரம் வருமாறு:

கோல் கீப்பர்கள்: பி.ஆர்.ஸ்ரீஜேஷ் (115 ஆட்டங்கள்), ஹர்ஜோத் சிங் (6 ஆட்டங்கள்)

தடுப்பாட்ட வீரர்கள்: ருபிந்தர் பால் சிங் (101 ஆட்டங்கள்), ரகுநாத் (176), விரேந்திர லக்ரா (87), கோதாஜித் சிங் (87), குர்பஜ் சிங் (180), குர்ஜிந்தர் சிங் (19)

நடுக்கள வீரர்கள்: மன்ப்ரீத் சிங் (112), சர்தார் சிங் (200), தரம்வீர் சிங் (90), டேனிஷ் முஜ்தபா (127), எஸ்.கே.உத்தப்பா (58).

முன்கள வீரர்கள்: ரமன் தீப் சிங் (26), எஸ்.வி.சுனில் (153), ஆகாஷ்தீப் சிங் (56), நிகின் திம்மையா (27), லலித் உபாத்யாய் (9).

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x