Published : 24 Nov 2014 02:31 PM
Last Updated : 24 Nov 2014 02:31 PM
பிரிஸ்பன் மைதானத்தில் டிசம்பர் 4-ஆம் தேதி தொடங்கும் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் மைக்கேல் கிளார்க் இடம்பெற்றுள்ளார்.
முதல் டெஸ்ட் போட்டிக்கான 13 வீரர்கள் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிரான 2-வது இருநாள் பயிற்சி போட்டி நவம்பர் 28-29 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. அதற்கு முன்பாக புதன் கிழமை அவர் உடல் தகுதியை நிரூபிக்க வேண்டும்.
அதன் பிறகு இந்தியாவுக்கு எதிரான 2 நாள் பயிற்சி ஆட்டத்தில் கிளார்க் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் அணித் தேர்வுக்குழு தலைவர் ராட்னி மார்ஷ் கூறும்போது,
“இந்தியாவுக்கு எதிரான 2-வது பயிற்சி ஆட்டத்தில் கிளார்க் விளையாட வேண்டும் என்பதே நோக்கம். அதில் அவரது உடல் தகுதி சரியாக அமைந்தால் மட்டுமே முதல் டெஸ்ட் போட்டிக்கு அவர் விளையாடுவது உறுதி செய்யப்படும். அவர் உலகத்தரம் வாய்ந்த வீரர் என்றாலும் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக அவரும் 100% உடல் தகுதி பெறுவது அவசியம்” என்றார்.
முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ரியான் ஹாரிஸ், மற்றும் ஆல் ரவுண்டர் ஷேன் வாட்சன் இடம்பெற்றுள்ளனர். அறிமுக வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் இந்த அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய அணி வருமாறு:
மைக்கேல் கிளார்க் (கேப்டன்), டேவிட் வார்னர், கிறிஸ் ராஜர்ஸ், ஷேன் வாட்சன், ஸ்டீவ் ஸ்மித், பிராட் ஹேடின், மிட்செல் மார்ஷ், ரியான் ஹாரிஸ், ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் ஜான்சன், நேதன் லயன், பீட்டர் சிடில்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT