Published : 16 Aug 2017 10:43 AM
Last Updated : 16 Aug 2017 10:43 AM
சின்சினாட்டி ஓபனில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், அமெரிக்காவின் கிறிஸ்டோபரை எதிர்த்து விளையாடினார். இதில் முதல் செட்டை 6-7 என ராம்குமார் இழந்தார். எனினும் அடுத்த இரு செட்களிலும் சிறந்த திறனை வெளிப்படுத்தி 6-1,6-4 என தன்வசப்படுத்தினார். முடிவில் ஒரு மணி நேரம் 48 நிமிடங்கள் நடைபெற்ற ஆட்டத்தில் 6-7, 6-1,6-4 என்ற செட் கணக்கில் ராம்குமார் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். ராம்குமார் தனது 2-வது சுற்றில் ஸ்பெயினின் ராபர்டோ பவுதிஸ்டா அகுட் அல்லது அமெரிக்காவின் டெனால்டுசனை எதிர்கொள்ள உள்ளார். இந்த தொடரில் பிரான்ஸ் வீரர் மோன்பில்ஸ் கடைசி நேரத்தில் விலகினார். இதனாலேயே ராம்குமாருக்கு இந்த தொடரில் விளையாடும் வாய்ப்பு கிடைத்ததுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT