Published : 27 Nov 2014 12:29 PM
Last Updated : 27 Nov 2014 12:29 PM
> கோவா மாநிலம் ஃபட்ரோடாவில் நேற்று நடைபெற்ற இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் கோவா எப்.சி. அணி 3-0 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியைத் தோற்கடித்தது. இதன்மூலம் 15 புள்ளிகளுடன் 3-வது இடத்துக்கு முன்னேறியது கோவா.
> கவுகாத்தியில் இன்று நடைபெறும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியும், சென்னையின் எப்.சி. அணியும் மோதுகின்றன.
> மக்காவ் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் பி.வி.சிந்து, எச்.எஸ்.பிரணாய், சாய் பிரணீத் ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு (3-வது சுற்று) முன்னேறியுள்ளனர். அதே நேரத்தில் இந்தியாவின் பி.சி.துளசி 12-21, 17-21 என்ற நேர் செட்களில் சீன தைபேவின் ஷூ யா சிங்கிடம் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறி னார்.
> டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய குத்துச் சண்டை வீரர் மனோஜ் குமாருக்கு அர்ஜுனா விருதை வழங்கினார் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மனோஜ் குமார், இப்போது அர்ஜுனா விருதை பெற்றதன் மூலம் எனக்கு விருது வழங்க மறுத்த கபில்தேவுக்கு (விருதுக் கமிட்டி தலைவர்) சரியான பதிலடி கொடுத்துவிட்டேன்” என்றார்.
> நியூஸிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்ஸில் 90 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் முகமது ஹபீஸ் 178 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
> பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆடியதன் மூலம் அதிக டெஸ்ட் போட்டிகளில் (112) ஆடிய நியூஸிலாந்து வீரர் என்ற பெருமையை நியூஸி லாந்தின் டேனியல் வெட்டோரி பெற்றார்.
> ஜிம்பாப்வேக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது வங்கதேசம். இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள வங்கதேசம் தொடரையும் கைப் பற்றியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT