Published : 13 Nov 2014 10:43 AM
Last Updated : 13 Nov 2014 10:43 AM

வெற்றி முனையில் பாகிஸ்தான்

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானின் வெற்றி உறுதியாகியுள்ளது. நியூஸிலாந்தின் வெற்றிக்கு இன்னும் 306 ரன்கள் தேவைப்படுகின்றன. ஆனால் அந்த அணிக்கு கைவசம் இரு விக்கெட்டுகள் மட்டுமே இருப்பதால் தோல்வி தவிர்க்க முடியாததாகியுள்ளது.

அபுதாபியில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் 3 விக்கெட் இழப்புக்கு 566 ரன்களும், நியூஸிலாந்து 262 ரன்களும் எடுத்தன. பின்னர் 2-வது இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் 4-வது நாளான நேற்று 39.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. அந்த அணியில் அதிக பட்சமாக முகமது ஹபீஸ் ஆட்ட மிழக்காமல் 101 ரன்கள் சேர்த்தார்.

இதையடுத்து 480 ரன்கள் என்ற இலக்குடன் பேட் செய்த நியூஸிலாந்து விரைவாக விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியில் கேப்டன் மெக்கல்லம் அதிகபட்சமாக 39 ரன்கள் சேர்த்தார். 4-வது நாள் ஆட்டநேர முடிவில் அந்த அணி 8 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்துள்ளது. கிரேக், சோதி ஆகியோர் தலா 27 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x