Published : 26 Jul 2017 04:19 PM
Last Updated : 26 Jul 2017 04:19 PM
இது மகளிர் கிரிக்கெட்டுக்கான சிறந்த காலம் என்று இந்திய மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் மிதாலி ராஜ் கூறியதாவது, “இது மகளிர் கிரிக்கெட்டுக்கான சிறந்த காலம். நான் பெருமையாகக் கூறுவேன் இந்த உலகக் கோப்பை தொடரில் என் அணியை சிறந்த முறையில் வழி நடத்தினேன்”
இந்திய பிரீமியர் மகளிர் போட்டிகள் தொடங்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த மிதாலி ராஜ், ”அம்மாதிரியான போட்டிகள் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டால் அது வீராங்கனைகளைக்கு தங்களை வெளிப்படுத்திக் கொள்ள பெரிய வாய்ப்பாக அமையும். ஆனால் இது பிபிசியிடம்தான் உள்ளது” என்றார்.
இந்திய மகளிர் அணிக்கு உற்சாக வரவேற்பு!
மகளிர் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தாலும் ரசிகர்களின் மனதை வென்று நாடு திரும்பிய இந்திய மகளிர் அணிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
உலகப் கோப்பையின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் 9 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வியைத் தழுவியது இந்திய அணி.
இருப்பினும் இறுதிப் போட்டி உட்பட உலகக் கோப்பை முழுவதும் சிறப்பாக விளையாடிய இந்திய மகளிர் அணிக்கு பிரதமர் மோடி உட்பட பல்வேறு தலைவர்கள் பாராட்டுகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் இன்று (புதன்கிழமை) நாடு திரும்பிய இந்திய மகளிர் அணிக்கு மும்பை விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
விமான நிலையத்தில் கூடியிருந்த ரசிகர்கள் வீராங்கனைகளின் புகைப்படங்களை பிடித்தபடி அவர்களின் பெயர்களை எழுப்பி கோஷமிட்டனர். மும்பை கிரிக்கெட் நிர்வாகம் வீராங்கனைகளை திலகமிட்டு வரவேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT