Published : 17 Jul 2017 05:38 PM
Last Updated : 17 Jul 2017 05:38 PM
விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தை 8-வது முறையாக வெல்வேன் என்று கனவிலும் நினைக்கவில்லை என்று பட்டம் வென்ற ரோஜர் பெடரர் கூறியுள்ளார்.
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
விம்பிள்டன் பட்டத்தை 8-வது முறையாக கைப்பற்றியது குறித்து பெடரர் கூறும்போது, ''நான் எட்டாதுவது முறையாக விம்பிள்டன் பட்டம் வெல்வேன் என்று கனவிலும் எண்ணவில்லை. இப்படி சாதனை படைக்க எந்த குறிக்கோளையும் கொண்டிருக்கவில்லை.
நான் டென்னிஸில் பல துயரமான தருணங்களை கடந்து வந்திருக்கிறேன். அப்பொதெல்லாம் நான் மீண்டும் சிறப்பாக விளையாடுவேன் என்று எனக்குத் தெரியும். ஆனால் இந்த அளவுக்கு எண்ணவில்லை. விம்பிள்டன் பட்டத்தை தக்க வைத்து கொள்ள அடுத்த வருடமும் வருவேன் என்ற நம்பிக்கை உள்ளது.
இறுதிப் போட்டியில் ஏற்பட்ட தோல்வியின் விரக்தியில் குரோஷியாவின் மரியன் சிலிச் மைதானத்திலே கண் கலங்கினார். அதனை கண்ட பெடரர், "இது மோசமான தருணம்தான். ஆனால் நீங்கள் கடுமையாக போராடினீர்கள். நீங்கள் கதாநாயகன்தான். நீங்கள் பங்கேற்ற போட்டிகள் அனைத்திலும் நீங்கள் சிறப்பாக ஆடி உள்ளீர்கள் அதை நினைத்து பெருமை கொள்ள வேண்டும். உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT