Published : 05 Jul 2017 10:35 AM
Last Updated : 05 Jul 2017 10:35 AM
விம்பிள்டன் டென்னிஸ் போட்டி யின் மகளிர் ஒற்றையர் பிரிவில் லக்சம்பர்க் வீராங்கனையான மேன்டி மினெல்லா, நான்கரை மாத கர்ப்பத்துடன் விளையாடி யது தெரியவந்துள்ளது.
செரீனா வில்லியம்ஸ், விக்டோரியா அசரன்கா ஆகி யோரது வரிசையில் தாயாக மாறும் டென்னிஸ் வீராங்கனைகளின் பட்டியலில் இணைந்துள்ளார் 31 வயதான மினெல்லா. நான்கரை மாத கர்ப்பிணியான அவர் நேற்று முன்தினம் நடைபெற்ற விம்பிடள்டன் முதல் சுற்று ஆட்டத்தில், இத்தாலியின் பிரான்செஸ்காவை எதிர்த்து விளையாடினார்.
இந்த ஆட்டத்தில் மினெல்லா 1-6, 1-6 என்ற நேர் செட்டில் தோல்வியடைந்தார். எனினும் கர்ப்பிணியான அவர், அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். மினெல்லா கூறும்போது, “குழந்தை பெற்றெடுக்க உள்ளதால் இந்த சீசனில் விம்பிள்டன் தான் எனது கடைசி தொடர்” என்றார்.
82-ம் நிலை வீராங்கனையான மினெல்லா, விம்பிள்டன் கோர்ட்டில் தனது கணவரும் பியிற்சியாளருமான டிம் சோமேர் வயிற்றில் முத்தமிடுவது போன்ற படத்தையும் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஒற்றையர் பிரிவில் தோல்வி யடைந்த நிலையில் மினெல்லா இரட்டையர் பிரிவல் லத்வியாவின் அனஸ்டஸிஜா செவஸ்டோவாவுடன் இணைந்து விளையாட உள்ளார்.
நடப்பு சாம்பியனான செரீனா வில்லியம்ஸ் தனது முதல் குழந்தையை வரும் செப்டம்பர் மாதம் பெற்றெடுக்க உள்ளார். இதனால் அவர் இம்முறை விம்பிள்டன் தொடரில் விளையாடவில்லை.
முன்னாள் முதல் நிலை வீராங்கனையான பெல்லாரசின் விக்டோரியா அசரன்கா கடந்த டிசம்பர் மாதம், முதல் குழந்தைக்கு தயானார். இதன் பின்னர் கடந்த ஜூன் மாதம் முதல் மீண்டும் டென்னிஸ் போட்டிகளில் விளையாடி வருகிறார். விம்பிள்டனில் அவர் 2-வது சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT