Published : 28 Jul 2017 09:09 AM
Last Updated : 28 Jul 2017 09:09 AM

உதவி ஆட்சியராக பி.வி.சிந்து நியமனம்

ஆந்திர மாநிலத்தில் உதவி ஆட்சியராக பி.வி. சிந்து நியமனம் செய்யப்பட்டார். இதற்கான பணி நியமன உத்தரவை நேற்று அமராவதியில் சிந்துவிடம் முதல்வர் சந்திரபாபு நாயுடு வழங்கினார்.

ரியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான பாட்மிண்டனில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி. சிந்துவுக்கு சில மாதங்களுக்கு முன் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு பாராட்டு விழா நடத்தினார். அப்போது அவர் பி.வி.சிந்துவுக்கு ரூ. 3 கோடி பரிசுத் தொகை, மற்றும் அமராவதியில் வீட்டு மனைப்பட்டா ஆகியவற்றை வழங்கி கவுரவித்தார். மேலும், பி.வி.சிந்து விரும்பினால் ஆந்திராவில் உதவி ஆட்சியராக பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.

இதனை பி.வி. சிந்து ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து, நேற்று அமராவதியில் உள்ள தலைமை செயலகத்தில் பி.வி. சிந்துவுக்கு பணி நியமன உத்தரவை சந்திரபாபு நாயுடு வழங்கினார். பின்னர் இது குறித்து பி.வி சிந்து செய்தியாளர்களிடம் கூறும்போது, “பணி நியமன உத்தரவை பெற்றுக்கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

ஆந்திர முதல்வர் விளையாட்டு வீராங்கனைகளை மிகவும் ஊக்கப்படுத்துகிறார். இதன் மூலம் பலர் விளையாட்டு துறையில் சாதிக்க முன் வருகின்றனர். விளையாட்டு துறையில் மேலும் சாதிக்க வேண்டும் என்பதே எனது என் லட்சியம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x