Published : 06 Aug 2015 02:59 PM
Last Updated : 06 Aug 2015 02:59 PM
கொழும்புவில் இலங்கை வாரியத் தலைவர் அணிக்கு எதிரான 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட இந்திய அணி சற்று முன் வரை 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்துள்ளது.
திரிமன்ன தலைமை இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் அணி டாஸ் வென்று முதலில் இந்திய அணியை பேட் செய்ய அழைத்தது.
தொடக்கத்தில் ராகுல், ஷிகர் தவண் களமிறங்கினர். இருவரும் நிதானப்போக்குடன் அபாரமாக விளையாடி முதல் விக்கெட்டுக்காக 108 ரன்கள் சேர்த்தனர்.
ராகுல் 43 ரன்களில் 6 பவுண்டரிகள் அடித்து கமகே பந்தில் குணதிலகவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
ஷிகர் தவண் தனது வங்கதேச பார்மை தொடர்ந்தார். அவர் 102 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 62 ரன்கள் எடுத்து வலது கை மித வேகப்பந்து வீச்சாளர் ரஜிதாவிடம் ஆட்டமிழந்தார்.
முன்னதாக 3-ம் நிலையில் இறங்கிய ரோஹித் சர்மா 14 பந்துகளில் 7 ரன்கள் எடுத்து ரஜிதா பந்தில் பவுல்டு ஆனார்.
விராட் கோலி 8 ரன்கள் எடுத்து ரஜிதா பந்தில் சிரிவதனாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
தற்போது ரஹானே 25 ரன்களுடனும் புஜாரா 15 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர். இலங்கை அணியில் மிதவேகப்பந்து வீச்சாளர் ரஜிதா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
சந்திர சேகர அரச்சிலகே கசுன் ரஜிதா என்ற இந்த வீச்சாளர் இது வரை 7 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். சிறந்த இன்னிங்ஸ் பந்து வீச்சு 2/63 தான், தற்போது இந்திய அணிக்கு எதிராக 3 விக்கெடுகளை முதல் முறையாகக் கைப்பற்றியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT