Published : 11 Sep 2016 09:17 AM
Last Updated : 11 Sep 2016 09:17 AM
பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டும் போட்டியில் தங்கம் வென்றுள்ள மாரியப்பன், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து, அவரிடம் வாழ்த்து பெறுவதை விருப்பமாகக் கொண்டுள்ளார் என்று அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி, பெரியவடகம்பட்டியைச் சேர்ந்த செங்கல் சூளை கூலித் தொழிலாள ரும், காய்கறி வியாபாரியுமான மாரியப்பனின் பெற்றோர் தங்கவேலு-சரோஜா கூறியதாவது:
பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் போட்டியில் முதலிடம் பிடித்து தங்கப் பதக் கத்தை பெற்ற எங்களது மகனுக்கு நல்ல வாய்ப்பும், புகழும் கிடைத் துள்ளது. மாரியப்பன் தமிழகம் திரும்பியதும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்து பெற வேண்டும் என்பதையே விருப்பமாக தெரிவித்துள்ளார். தனிப்பட்ட முறையில் தமிழக முதல் வரை சந்திக்க வேண்டி அவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
எப்பொழுதுமே விளையாட்டுத் துறை மீது தனி அக்கறை செலுத்தும் தமிழக முதல்வர், எங்களது மகன் தங்கப் பதக்கம் வென்றதும், உடனடியாக ரூ.2 கோடி பரிசளித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இதற்காக, நாங்கள் முதல்வருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
தங்கப் பதக்கத்துடன் மாரியப்பன் தாயகம் திரும்பும் போது, ஒரு சில நிமிடங்கள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க வாய்ப்பளித்தால், அதனை பெருமையாக கருதுவோம். விளையாட்டுத் துறை வளர்ச்சியில் பெரிதும் அக்கறையும், முக்கியத்து வமும் அளிக்கும் தமிழக முதல்வர், மாரியப்பன் சந்தித்து வாழ்த்து பெற ஒரு வாய்ப்பை அளிப்பார் என நம்புகிறோம்.
எங்கள் மகன் தங்கம் வெல்ல காரணமாக இருந்த பாராலிம்பிக் வாலிபால் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா தலைவர் சந்திரசேகர், பயிற்சியாளர் சத்யநாராயணன் மற்றும் பள்ளி, கல்லூரி உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் தொடர்ந்து ஊக்கமளித்த கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி ஆகியோருக்கும் எங்களது நெஞ் சார்ந்த நன்றிகளை தெரிவித் துக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வீதிக்கு மாரியப்பன் பெயர்
பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்ல மாரியப்பனுக்கு உறுது ணையாக இருந்த பாராலிம்பிக் வாலிபால் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா தலைவர் சந்திரசேகரன் மற்றும் கர்நாடக மாநில அதிமுக செயலாளர் வ.புகழேந்தி ஆகியோர் கூறியதாவது:
பாராலிம்பிக் போட்டியில் கட்டாயம் தங்கம் வெல்வேன் என்று உறுதியாக கூறிவிட்டுத்தான் கிளம்பினார் மாரியப்பன். பதக் கத்தை பெற்றுக்கொண்டு வந்து தமிழக முதல்வரிடம் வாழ்த்தும் ஆசியும்பெறவேண்டும் என்று ஆசைப்படுவதாக அவர் சொல்லி விட்டுச் சென்றது எங்களை மிகவும் நெகிழச் செய்தது. தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ள மாரியப்பனை கவுரவிக்கும் வகை யில், அவர் பிறந்த சொந்த ஊரில், அவர் வசிக்கும் வீதிக்கு மாரியப்பன் பெயரை சூட்ட வேண்டும் என்பது எங்களது விருப்பம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT