Published : 12 Sep 2016 07:03 PM
Last Updated : 12 Sep 2016 07:03 PM
ரேடியோ மிர்ச்சிக்கு பேட்டி அளித்த யுவராஜ் சிங் சக வீரர்களின் பணம் செலவழிக்கும் பழக்கம் பற்றி ஜாலியாக சில கருத்துகளை தெரிவித்துள்ளார்.
“நம் அணியில் நிறைய கருமிகள் உண்டு. குறிப்பாக மூத்த வீரர்கள். ஆனால் நான் அவர்கள் பெயர்களை வெளியிட மாட்டேன், ஏனெனில் இது உணர்ச்சிவயப்படும் விவகாரமாகும்.
இதை எப்படி விளக்குவது என்று எனக்குத் தெரியவில்லை, அதாவது இது உன்னுடைய செலவு, இது என்னுடைய செலவு... நீ இதற்கு பணம் கொடுத்து விடு அதற்கு நான் தருகிறேன்.. போன்றது. பஞ்சாபி கலாச்சாரத்தில் இப்படி இருக்காது, நாங்கள் வெளியே சென்றால் ஒரேயொரு நபரே செலவழிப்பார். ஆனாலும் சிலர் வித்தியாசமாக இருப்பார்கள், நடப்பு அணியில் விராட் கோலி ஒரு பெரிய கருமி. ஒவ்வொரு முறை வெளியே சுற்றும் போதும், நான் தான் செலவழிப்பேன். அதே போல் அணியில் கோபமான இளம் வீரரும் இவரே” என்றார்.
ஆஷிஷ் நெஹ்ரா பற்றி கூறிய போது, “நெஹ்ரா பெருந்தன்மையானவர்தான், ஆனால் சில வேளைகளில் அவர் தயக்கம் காட்டுவார். அதுவும் அவருக்குத் திருமணமான பிறகு ‘புரிந்து கொள் எனக்கு திருமணம் ஆகி விட்டது. நான் என் மனைவி, குழந்தைகளுக்காக சேர்க்க வேண்டும், என்னால் அதிகம் செலவிட முடியாது என்பார்.
ஆனால் இவையெல்லாம் எதற்குக் கூறுகிறேன் என்றால் கருமி என்று அர்த்தமல்ல, எங்களுக்கிடையே ஒரு விளையாட்டுத் தனமான கிண்டல் உண்டு என்பதைக் கூறுவதற்காகவே.
மூத்த வீரர்களில் ஜவகல் ஸ்ரீநாத் பெருந்தன்மையானவர். அவருடன் நீண்ட நாட்கள் ஆடிய பிறகு கடைசியில் அவர் ஒரு விருந்து வைத்தார், அதன் படங்களை ட்விட்டரில் நாங்கள் பகிர்ந்துள்ளோம், அதில் “நன்றி ஸ்ரீநாத்ஜீ, 15 ஆண்டுகளுக்குப் பிறகு விருந்துக்கு நன்றி” என்று ஜாலியாக குறிப்பிட்டுள்ளோம்.
நான் சவுரவ் கங்குலி தலைமையில் இந்திய அணிக்குள் நுழைந்தேன். அவர் வீரர்களை ஒன்று திரட்டுபவர், ஆதரவளிப்பவர், ஆஷிஷ், சேவாக், ஹர்பஜன் போன்ற வீரர்கள் குழுவை ஒன்றிணைத்தார். எனவே நான் விளையாடியதிலேயே சிறந்த கேப்டன் சவுரவ் கங்குலிதான்” இவ்வாறு கூறினார் யுவராஜ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT