Published : 20 Jun 2017 12:26 PM
Last Updated : 20 Jun 2017 12:26 PM
ஒரு போட்டியை வைத்து விராட் கோலியின் திறமையை முடிவு செய்யாதீர்கள் என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் தொடக்க வீரரும், அதிரடி ஆட்டக்காரருமான கில்கிறிஸ்ட் கூறியுள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்தது. இதனையடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மீது பல தரப்புகளிலிருந்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் அதிரடி ஆட்டக்காரர் ஆடம் கில்கிறிஸ்ட் விராட் கோலிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கில்கிறிஸ்ட் கூறியதாவது, "எம்.எஸ்.தோனி ஒரு சிறந்த தலைவர். அற்புதமான கேப்டன். ஆனால் சாம்பியன்ஸ் டிராபி கோப்பை தொடரில் கோலி சிறப்பாகவே தனது அணியை வழி நடத்தினார்.
ஒரு போட்டியை வைத்து கோலியின் அணுகுமுறையை குறை கூறுவது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல. இந்திய அணியை வழி நடத்த கோலி சரியான தேர்வுதான்" என்றார்.
இறுதிப் போட்டியில் பாகிஸ்தானின் வெற்றி குறித்து கூறும்போது, “ பாகிஸ்தானின் ஆட்டம் எனக்கு வியப்பாக இருந்தது. பாகிஸ்தான் ஒரு கணிக்க முடியாத அணி. இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடியது எனினும் இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவியது ஏமாற்றம்தான்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT