Published : 04 Nov 2014 11:39 AM
Last Updated : 04 Nov 2014 11:39 AM
இண்டியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் சென்னையில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் ஆட்டத் தில் சென்னையின் எப்சி – அட்லெடிகா கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அப்போட்டி நடைபெறுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதுவரை 4 ஆட்டங்களில் பங்கேற்றுள்ள சென்னை 3 வெற்றி, 1 தோல்வியுடன் 9 புள்ளிகள் பெற்றுள்ளது. அதே நேரத்தில் கொல்கத்தா அணி இதுவரை தோல்வியடையவே இல்லை. அந்த அணி 5 ஆட்டங்களில் 3 வெற்றி, 2 டிராவுடன் 11 புள்ளிகள் பெற்றுள்ளது.
புள்ளிகள் பட்டியலில் கொல்கத்தா முதலிடத்திலும் சென்னை 2-வது இடத்திலும் உள்ளது. எனவே பலம் வாய்ந்த இந்த இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
சென்னை நேரு மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெறவுள்ளது. எனினும் சென்னையில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இன்றும் மழை பெய்ய வாய்ப் புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே போட்டி நடைபெறுவதில் சந்தேகம் நிலவுகிறது.
சென்னை நேரு மைதானத்தில் சென்னையின் எப்.சி. அணி இதுவரை 2 ஆட்டங்களில் விளையாடி யுள்ளது. இதில் முதல் ஆட்டத்தில் 2–1 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்சை தோற்கடித்தது. 2–வது ஆட்டத்தில் 5–1 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டியை வீழ்த்தியது.
எனவே சென்னை மைதானத்தில் உள்ளூர் அணியான சென்னையின் எப்.சி. தொடர்ந்து 3-வது வெற்றியை பதிவு செய்யும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதே நேரத்தில் கொல்கத்தா அணி இதுவரை தோல்வியே அடையாத அணியாக உள்ளது. எனவே இப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT