Published : 08 Dec 2013 12:00 AM
Last Updated : 08 Dec 2013 12:00 AM

உலகக் கோப்பை கால்பந்து முதல் ஆட்டத்தில் நெதர்லாந்தைச் சந்திக்கிறது ஸ்பெயின்

2014-ல் நடைபெற உள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியன் ஸ்பெயின் தனது முதல் ஆட்டத்தில் நெதர்லாந்தை சந்திக்கிறது. இந்த இரு அணிகளும்தான் கடந்த உலகக் கோப்பையில் இறுதிச்சுற்றில் மோதின. அதில் ஸ்பெயின் 1-0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி உலக சாம்பியன் ஆனது குறிப்பிடத்தக்கது.

இந்த உலகக் கோப்பையில் மொத்தம் 32 அணிகள் பங்கேற்கி ன்றன. அவை பிரிவுக்கு 4 அணிகள் வீதம் மொத்தம் 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றை பிரிப்பதற்கான டிரா கோஸ்டா டோ சௌபே நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதன்படி போட்டியை நடத்தும் நாடான பிரேசில் ஜூன் 12-ம் தேதி நடைபெறும் முதல் ஆட்டத்தில் குரேஷியாவை சந்திக்கிறது. பிரேசில் இடம்பெற்றுள்ள பிரிவில் குரேஷியா, மெக்ஸிகோ, கேமரூன் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. அதனால் நாக் அவுட் சுற்றான காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு பிரேசில் எளிதாக முன்னேறுவதற்கான வாய்ப்புள்ளது.

1978, 1986 ஆகிய ஆண்டுகளில் உலகக் கோப்பையை வென்ற ஆர்ஜென்டீனா தனது முதல் ஆட்டத்தில் முதல் முறையாக உலகக் கோப்பையில் விளையாட தகுதிபெற்றுள்ள போஸ்னியாவை சந்திக்கிறது. ஆர்ஜென்டீனா, போஸ்னியா, ஈரான், நைஜீரியா ஆகிய அணிகள் எஃப் பிரிவில் இடம்பெற்றுள்ளன. உலகக் கோப்பையில் ஆர்ஜென்டீனாவும், நைஜீரியாவும் இதுவரை 6 முறை மோதியுள்ளன. அதில் 5 முறை ஆர்ஜென்டீனா வெற்றி பெற்றுள்ளது. அதனால் ஆர்ஜென்டீனா எளிதாக அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இ பிரிவைப் பொறுத்த வரையில் ஸ்விட்சர்லாந்து, பிரான்ஸ், ஈகுவடார், ஹோண்டு ராஸ் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. இதில் ஸ்விட்சர்லாந்து, பிரான்ஸ் ஆகிய இரு அணிகளும் பலம் வாய்ந்தவை என்பதால் அந்த அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ளது.

8 பிரிவுகளிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் நாக் அவுட் சுற்றான காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x