Last Updated : 30 Apr, 2017 06:53 PM

 

Published : 30 Apr 2017 06:53 PM
Last Updated : 30 Apr 2017 06:53 PM

அஸ்லன் ஷா ஹாக்கி: ஹர்மன்பிரீத் சிங் இரட்டை கோல்களால் நியூஸி.யை வீழ்த்தியது இந்தியா

மலேசியாவின் இபோவில் நடைபெறும் சுல்தான் அஸ்லன் ஷா ஹாக்கி தொடர் 2-வது போட்டியில் நியூஸிலாந்து அணியை இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

முதல் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக அபாரமாக ஆடி இருமுறை முன்னிலை வகித்தும் கடைசியில் 2-2 என்று இங்கிலாந்து டிரா செய்ய இந்திய அணி அனுமதித்தது, இந்நிலையில் இன்றைய வெற்றி இந்திய அணிக்கு பெரும் ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது.

தடுப்பாட்ட வீரர் ஹர்மன்ப்ரீத் சிங் 2 பெனால்டி கார்னர் வாய்ப்புகளை மிக அருமையாக கோல்களாக மாற்றினார். இந்த வெற்றியை அடுத்து இந்திய அணி 2 போட்டிகளில் 4 புள்ளிகள் பெற்றுள்ளது.

மந்தீப் சிங் 23-வது நிமிடத்தில் அருமையான முதல் கோலை அடித்து முன்னிலை கொடுத்தார்.

தொடக்கதில் முதல் 15 நிமிட ஆட்டத்தில் நியூஸிலாந்து ஆதிக்கம் செலுத்தி 3 ஷாட்களை இந்திய கோல் நோக்கி அடித்தது, ஆனால் கோலாக மாறவில்லை இதனையடுத்து இந்தியா சில உத்திகளை மாற்றி ஆக்ரோஷமாக ஆடி ஆதிக்கம் செலுத்தியது.

இந்தியாவுக்கு மொத்தம் 7 பெனால்டி கார்னர்கள் கிடைத்தன, இதில் 6 கார்னர்களை ஹர்மன்பிரீத் எடுத்தார், ஆனால் இதில் 2ஐ மட்டுமே கோலாக மாற்ற முடிந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x