Published : 20 Feb 2014 11:45 AM
Last Updated : 20 Feb 2014 11:45 AM
ரஷ்யாவின் சோச்சி நகரில் நடைபெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக் பனிச்சறுக்குப் போட்டியில் இந்திய வீரர் ஹிமான்சு தாகூர் 72-வது இடத்தைப் பிடித்து ஏமாற்றம் அளித்தார்.
ஆடவர் ஜெயன்ட் ஸ்லோம் பனிச் சறுக்கு பிரிவில் அவர் நேற்று பங்கேற்றார். இதில் மொத்தம் 107 வீரர்கள் இடம் பிடித்தனர். போட்டியின் போது செய்த தவறுகள், இலக்குகளை குறித்த நேரத்தில் கடக்காதது உள்ளிட்ட காரணங்களால் 35 பேர் நடுவிலேயே போட்டியில் இருந்து நீக்கப்பட்டனர். மீதமுள்ள 72 பேர் மட்டுமே போட்டியை நிறைவு செய்தனர். இதில் ஹிமான்சுவால் கடைசி இடத்தையே பிடிக்க முடிந்தது.
சோச்சி குளிர்கால ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் 3 பேர் பங்கேற்றனர். மூவராலும் பெரிய அளவில் எதையும் சாதிக்க முடியவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT