Last Updated : 10 Nov, 2014 02:58 PM

 

Published : 10 Nov 2014 02:58 PM
Last Updated : 10 Nov 2014 02:58 PM

இலங்கைக்கு எதிராக தொடர்ச்சியாக 6-வது ஒருநாள் தொடரை வென்ற இந்தியா: சுவையான தகவல்கள்

நேற்று நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியிலும் இலங்கையை வீழ்த்தி தொடரை 3-0 என்று இந்திய கிரிக்கெட் அணி கைப்பற்றியது. தொடர்ச்சியாக இலங்கையை 6-வது ஒருநாள் தொடரில் இந்தியா வீழ்த்தியுள்ளது.

விராட் கோலி இலங்கைக்கு எதிராக தனது 9-வது அரைசதத்தை எடுத்தார். ஒருநாள் போட்டிகளில் அவரது 32-வது அரைசதமாகும் இது.

2014-ஆம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையையும் விராட் கோலி பெற்றார். 19 போட்டிகளில் 49.94 என்ற சராசரி விகிதத்தில் அவர் 849 ரன்களைக் குவித்துள்ளார்.

அதிவிரைவில் 6000 ரன்களைக் கடந்த விராட் கோலி, விவியன் ரிச்சர்ட்ஸ் சாதனையை முறியடித்து முதலிடம் வகிக்கிறார். கோலியின் சராசரி தற்போது 51.30.

ஷிகர் தவன் (79 பந்துகளில் 91 ரன்கள்) ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 11-வது அரைசதத்தை நேற்று எடுத்தார். இலங்கைக்கு எதிராக அவரது 4-வது ஒருநாள் சதம். இந்தியாவில் ஷிகர் தவனின் ஒருநாள் போட்டி சராசரி 55.33 என்பது குறிப்பிடத்தக்கது.

உமேஷ் யாதவ் (4/53) நேற்று அவரது சிறந்த ஒருநாள் கிரிக்கெட் பந்துவீச்சை நிகழ்த்தினார். இதற்கு முன் 2013-ஆம் ஆண்டு தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக போர்ட் ஆஃப் ஸ்பெயின் மைதானத்தில் 32 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதே அவரது சிறந்த பந்துவீச்சாக இருந்தது.

இந்தியாவுக்கு எதிராக குமார் சங்கக்காரா 3-வது முறையாக ரன் எடுக்காமல் ஆட்டமிழந்துள்ளார். ஒட்டு மொத்தத்தில் அவர் 15 முறை ரன் எடுக்கும் முன்பு ஆட்டமிழந்துள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் 12,000 ரன்களை எடுத்த ஜெயவர்தனே 399 இன்னிங்ஸ்களில் இந்த ரன்களை எடுத்ததன் மூலம் அதிக போட்டிகளில் 12,000 ரன்கள் எடுத்த வீரர் ஆனார். சச்சின் டெண்டுல்கர் 300 போட்டிகளில் 12,000 ரன்களை எட்டினார். பாண்டிங் 314 போட்டிகளில் 12,000 ரன்களை எட்டினார். குமார் சங்கக்காரா 336 போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்ட, சனத் ஜெயசூரியா 379 ஒருநாள் போட்டிகளில் 12,000 ரன்களை எட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x