Published : 20 Sep 2016 06:58 PM
Last Updated : 20 Sep 2016 06:58 PM

சிக்குன்குனியா காய்ச்சல்: முதல் டெஸ்டில் இசாந்த் சர்மா இல்லை

சிக்குன்குனியா காய்ச்சல் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் இசாந்த் சர்மா நியூஸிலாந்துக்கு எதிரான கான்பூர் டெஸ்ட் போட்டியில் ஆடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பயிற்சியாளர் அனில் கும்ப்ளே, “அவரது உடல் நிலை முன்னேற்றம் குறித்து மருத்துவர்களிடம் தொடர்பில் இருந்து வருகிறோம், எனவே முதல் டெஸ்ட் முடிந்த பிறகு அவர் தொடரில் தொடர்ந்து ஆட முடியுமா என்பதை தீர்மானிப்போம். முதல் டெஸ்ட் போட்டிக்கு இசாந்த் சர்மாவுக்கு பதிலி வீரர் தேவைப்படாது என்று முடிவெடுத்துள்ளோம்” என்றார்.

எனவே மொகமது ஷமி, புவனேஷ் குமார், உமேஷ் யாதவ் ஆகியோர் தேர்வுக்கு உள்ளனர். பிட்ச் மிகவும் வறண்டு காணப்படுகிறது. பிளவுகள் இருந்தாலும் அது தளர்வாக இல்லை. இந்தப் பிட்சில் பந்துகள் அபரிமிதமாகத் திரும்பாது, ரிவர்ஸ் ஸ்விங்கிற்கு வாய்ப்புகள் அதிகம் என்று பிட்ச் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அதிக வேகத்தில் ரிவர்ஸ் ஸ்விங் சாத்தியம் என்பதால் ஷமியை விட உமேஷ் யாதவ்வுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இந்திய அணி 3 ஸ்பின்னர்களுடன் களமிறங்குவது ஏறக்குறைய முடிவான விஷயமாகத் தெரிகிறது.

2 நாட்களுக்கு முன்பாக நடந்த வலைப்பயிற்சியில் புவனேஷ் குமாரும், உமேஷ் யாதவ்வும்தான் முன்னிலை பேட்ஸ்மென்களுக்கு அதிக ஓவர்களை வீசினர். மொகமது ஷமி பின்கள வீரர்களுக்கும் ஷிகர் தவணுக்கும் வீசினார், ஷிகர் தவண் முதல் டெஸ்ட் போட்டியில் இருக்க மாட்டார் என்பதை இது அறிவுறுத்துகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x